மேலும் அறிய

Tirupati Darshan: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திட்டமா? சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு.. முழு விவரம்..

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 கட்டண தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கவுள்ளது. 

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 கட்டண தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கவுள்ளது. 

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 11 ஆம் தேதி வரை திருப்பதியில்  சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

ரூ.300 கட்டணத்தில் பரமபத வாசல் வழியாக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இதற்காக இலவசம் மற்றும் ரூ.300 செலுத்துவதன் மூலம் கிடைக்கும் சிறப்பு தரிசனங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

View this post on Instagram
 
A post shared by TIRUMALA TIRUPATI DEVASTHANAM (@ttddevasthanam)

வெளியான புதிய அறிவிப்பு 

இதனிடையே  வரும் ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாலாலயம் தொடர்பான பணிகள் காரணமாக பிப்ரவரி 22 முதல் 28ம் தேதி வரையில் சிறப்பு தரிசனத்திற்கான அனுமதி இருக்காது எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இலவச தரிசன டோக்கன் விநியோகம் எப்போது? 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக 9 இடங்களில் 90 கவுண்டர்களை தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் வெளியூர் பக்தர்கள் மட்டுமே டோக்கன் வாங்கி செல்வதால் இந்த கவுண்டர்கள் எண்ணிக்கை 40 ஆக குறைக்கப்பட்டது. ஜனவரி 11 ஆம் தேதி வரையிலான இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது நேற்றுடன் நிறைவடைந்தது. 

இதனால் மீண்டும் வழக்கம்போல ஜனவரி 12 ஆம் தேதி 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர்கள் செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாலாலயம் என்றால் என்ன?

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட புதிய தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி சுமார் ஆறு மாதகாலம் நடைபெறும் என கூறப்படுகிறது.  இந்த சமயத்தில் பாலாலயம் செய்யப்படும்போது வேறு ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெறும். அதேசமயம்  திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும் வழிபடலாம். மூலவருக்கு நடைபெறும் கட்டண சேவைகள் வழக்கமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் 1957- 58 ஆம் ஆண்டில் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்ட போதும், 2018 ஆம் ஆண்டு பாலாலயம் நடைபெற்ற போதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Jasprit  Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
Jasprit Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
Embed widget