வேலைக்கு ஆள் தேவை... மேட்ரிமோனியில் இளம்பெண் செய்த காரியம்... ஆத்திரத்தில் அப்பா அனுப்பிய மெசேஜ்!
பெங்களூரைச் சேர்ந்த ஸ்டாட்-அப் நிறுவனத்தை நடத்தி வரும் பெண் ஒருவர் மேட்ரிமோனியன் சைட்டில் இருந்து ஒரு நபரை தனது நிறுவனத்திற்கு பணி செய்யுமாறு கேட்டுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த ஸ்டாட்-அப் நிறுவனத்தை நடத்தி வரும் பெண் ஒருவர் மேட்ரிமோனியன் சைட்டில் இருந்து ஒரு நபரை தனது நிறுவனத்திற்கு பணி செய்யுமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அப்பா-மகள் பேசிக்கொண்ட ஸ்கிரீன்சார்ட் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பெங்களூரில் இயங்கி வரும் Salt என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை நிறுவனர், உதிட்டா பால் (Udita Pal). இவருடைய அப்பா, மேட்ரிமோனியில் மாப்பிள்ளை ப்ரொபைல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உதிட்டாவுக்கு அனுப்பியுள்ளார். அந்த நபருடன் பேசி பார்க்குமாறு அனுப்பியிருக்கிறார். இதை உதிட்டா கையாண்டவிதத்திற்கு அவர் அப்பா கோபத்துடன் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷார்டை உதிட்டா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அப்படி உதிட்டா என்ன செய்தார் தெரியுமா?
What getting disowned from father looks like. pic.twitter.com/nZLOslDUjq
— Udita Pal 🧂 (@i_Udita) April 29, 2022
”உன்னிடம் அவசரமாக பேச வேண்டும். நீ என்ன செய்திருக்கிறாய் தெரியுமா? மேட்ரிமோனியல் வெப்சைட்களில் இருந்து நீ வேலைக்கு ஆட்களை எடுக்க முடியாது. அந்த பையனின் அப்பாவிடம் நான் என்ன சொல்வேன். அவனிடம் ரெசுயூம் கேட்டதையும் இன்டெர்வியூ லிங் அனுப்பிய மெசஜையும் நான் பார்த்தேன்" – இது உதிட்டா அப்பா தனது மகளுக்கு அனுப்பிய மெசேஜ்..
"நிறுவனத்தின் 7 வருட அனுபவம் சிறப்பு வாய்ந்தது. அப்புறம் எங்களுக்கு வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது" – என தன் அப்பாவுக்கு உதிட்டா பதில் அனுப்பியுள்ளார்.
உதிட்டாவின் அப்பா, தன் மகளுக்கு வாழ்க்கை துணையாக வரக் கூடியவர் என நினைத்து அவருக்கு மேட்ரிமோனியில் இருந்து ஒரு ப்ரொபைலை அனுப்பியுள்ளார். அதற்கு உதிட்டா, அந்த நபரை தன் நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவைப்படுதாகவும், நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமா என்று கேட்டுள்ளார். அவரிடம் ரெஸ்யூம் அனுப்பும்படியும் கேட்டுள்ளார். இதனால்தான் உதிட்டாவின் அப்பா தன் மகள் மீது ரொம்பவே கோபமாகிவிட்டார்.
இருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் "அப்பாவிடம் இருந்து விடுபடுதல் என்பது இப்படிதான் இருக்கும்" என்கிற கேப்ஷனோடு பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் வைரல் ஆகி 13700 லைக்களை கடந்தது. மேலும், பலரும் இதை கமெண்ட்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
"அந்தப் பையன் 62 இலட்சம் வருடத்திற்கு சம்பளமாகக் கேட்கிறார். (எங்களால் அவ்வளவுக்கு ஏற்க முடியாது) அப்பா என்னுடைய மெட்ரிமோனியல் ப்ரொபைலை அழித்துவிட்டார். யாரும் என்னை வெறுக்காதீங்க. நான் சீக்கிரம் அழுதுடுவேன்" என உதிட்டா கமெண்ட் செய்திருக்கிறார்.
இந்த பதிவுக்கு, சிலரின் கமெண்ட்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…
”நீங்கள் விரைவில் நாக்ரீயில் naukri.com-மூலம் திருமணம் செய்துகொள்ள வாழ்த்துகள்.”
One of the best things I have read today, more power to you girl :) I can't stop smiling and now laughing, hahahaha, too goooooodddd
— Manish Pandey (मनीष पाण्डेय) (@join2manish) April 29, 2022
And that's how you play by the rules while braking them😂
— Tushar Tayal (@tushar_raven) April 29, 2022
Best use of matrimonial sites😂😂😂😂😂😂
— Monica (@musing_monica) April 29, 2022
I can see myself doing this one day.
— Shristi (@ShrySty) April 29, 2022
I've done a lot of job discussions on dating apps😛
That is hilarious. Still more words than my Dad who sends me a thumbs up emoji when I send a voice note about life... worse thing is, it's a *forwarded* emoji. #ThanksDad 😂 pic.twitter.com/jFL82hoWWT
— Sushil Karam, Ph.D. (@DrKaram17) April 29, 2022
🚨 Hiring Alert 🚨 @saltpe_ is hiring a Senior Marketing Manager. @saltpe_ is a cross-border payment and compliance company, targetting close to $1.3 trillion worth of the market in India.
— Udita Pal 🧂 (@i_Udita) April 29, 2022
Hope, u get married on https://t.co/lDBFS0wasG
— Fiat justitia (raisond'etre- homosapien)beदीme (@PrmSwrp) April 29, 2022
”உங்கள் நிறுவனத்தில் எந்த பதவிக்கு வேலைக்கு எடுக்கிறீர்கல் எனத் தெரிந்து கொள்ளலாம்?”
”இது எப்போதவதுதான் நடக்கும். இந்த சம்பவத்தை வைத்து மேட்ரிமோனியில் யாரும் வேலை தேட வேண்டாம்.”