(Source: ECI/ABP News/ABP Majha)
PSLV C56: அடுத்த ராக்கெட் தயார்...! விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி-சி 56: எப்போது? பயன்பாடுகள் என்ன?
பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளாக டிஎஸ் – சாரை சுமந்துக்கொண்டு வரும் ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
பி.எஸ்.எல்.வி சி 56 ராக்கெட் சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளாக டிஎஸ் – சாரை சுமந்துக்கொண்டு வரும் ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருக்கும் முதலாம் ஏவுதளத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
🇮🇳PSLV-C56🚀/🇸🇬DS-SAR satellite 🛰️ Mission:
— ISRO (@isro) July 24, 2023
The launch is scheduled for
📅 July 30, 2023
⏲️ 06:30 Hrs. IST
🚩First launch pad SDSC-SHAR, Sriharikota. @NSIL_India has procured PSLV-C56 to deploy the DS-SAR satellite from DSTA & ST Engineering, Singapore
and 6 co-passenger… pic.twitter.com/q42eR9txT7
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிற்வனம் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்எம்வி ஆகிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இது தவிர வணிக ரீதியாகவும் இஸ்ரோ செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. ஜூலை 14 ஆம் தேதி உலகே உற்றுநோக்கிய சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 3ன் நிலவு பயணம் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-சார் எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜூலை 30 ஆம் தேதி சிங்கப்பூரில் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான டிஎஸ் – சார் உடன் 6 செயற்கைக்கோள்கள் சுமந்து பிஎஸ்எல்வி சி 56 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் டிஎஸ் – சார் செயற்கைக்கோளை முதன்மையாக கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 360 கிலோ எடை கொண்டுள்ளது. மேலும், சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. அதாவது பகல் இரவு என அனைத்து காலங்களிலும் துல்லியமாக புகைப்படங்கள் எடுக்கும் தன்மை கொண்டது. இத்துடன் வெலாக்ஸ் ஏ.எம் – 23 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள், ஆர்கேட், ஸ்கூப் -2, நல்லியன், கலேசிய 2, ORB 12 STRIDER ஆகிய 6 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இந்த 7 செயற்கைக்கோள்களும் தொழில்நுட்ப பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Crime: லிவ் இன் பார்ட்னரின் கருவை கலைக்க, மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன் - உள்ளே தள்ளிய போலீஸ்..!