மேலும் அறிய

Parliament Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் கூட்டத்தொடர்.. முக்கிய அம்சங்கள் என்ன? எதிர்க்கட்சிகளின் பக்கா ப்ளான்?

இன்று நாடாளுமன்ற  கூட்டத்தொடர் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார் இந்த கூட்டத்தில் உரையாற்றுவார்.

நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரை முழு ஒத்துழைப்புடன் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அனைத்து கட்சி கூட்டம் நேற்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் மகனான ரவீந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதியில் அந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடைபெறும். அந்த வகையில் இன்று நாடாளுமன்ற  கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் காலை நடைபெறும் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு கூட்டத்தில் உரையாற்றுவது இதுதான் முதல் முறையாகும்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். இந்த அறிக்கையில் 2022-2023ம் ஆண்டின் வளர்ச்சி, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (பிப்ரவரி 1ம் தேதி) நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது. நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.

அப்போது, வரவிருக்கும் 2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வரி திட்டங்களை தாக்கல் செய்யப்படும்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இந்த அரசாங்கத்தின் கடைசி முழு ஆண்டு பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் பெறுகிறது. அதுமட்டுமின்றி, உலக பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

முக்கிய துறைகளில் மானியம் அறிவித்து ஜிடிபி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என பல்வேறு துறையினர் எதிர்பார்க்கின்றனர். அதேபோல, வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது தனிநபர்களின் கோரிக்கையாக உள்ளது.

கிராமப்புற இந்தியா:

இதுகுறித்து மணிபாக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபக் அகர்வால் கூறுகையில், "கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் 65% மக்கள்தொகை பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளைச் சார்ந்து இருப்பதால், இந்தத் துறையின் வேகமான மற்றும் நிலையான வளர்ச்சியானது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருக்கும்.

ஜன் - தன் கணக்குகள், முத்ரா யோஜனா போன்ற கொள்கை திட்டங்கள் கடன் பெறுவதற்கான வசதியை அதிகப்படுத்தியுள்ளது. நாட்டின் தேசிய வருவாயில் பாதி பங்களிப்பை வழங்கினாலும், கிராமப்புற இந்தியா வங்கிக் கடனில் 9% பங்கை மட்டுமே பெற்றுள்ளதால் கூடுதல் உத்வேகம் தேவைப்படுகிறது" என்றார்.

கிரிப்டோ நாணயம்:

இதுபற்றி காயின்ஸ்விட்ச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பேசுகையில், "கடந்த ஆண்டு, மத்திய பட்ஜெட் கிரிப்டோக்களை அங்கீகரிப்பதாக இருந்தபோதிலும், இந்த ஆண்டு அதை ஒழுங்குப்படுத்த வேண்டும். கிரிப்டோக்களைக் கண்டுபிடித்து வரி விதிக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இருப்பினும், முற்போக்கான வரிவிதிப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம்" என்றார்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள்:

இதுகுறித்து அய்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தேபர்ஷி தத்தா விவரிக்கையில், "அரசாங்கம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்த முயற்சியை எளிதாக்குவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளை (FPO) அமைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. 

இதற்கு நிதியுதவி உதவும் அதே வேளையில், இந்த FPOக்களை தொழில்ரீதியாக நிர்வகித்தல், தரவுகளை சேகரிப்பது, சந்தை இணைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முயற்சிகளை ஆதரிப்பது இந்த FPOகளின் தாக்கத்தை அதிவேகமாக வளர்க்க உதவும்" என்றார்.

இந்த கூட்டத்தொடரின் போது பிபிசி ஆவணப்பட, ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை, எல்ஐசி பங்குகள் போன்ற விவகாரங்களை பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. இத்துடன் நீட் தேர்வு, மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆகிய விவகாரங்களை திமுக எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Embed widget