NIA Raid: நாடு முழுவதும் களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்.. 6 மாநிலங்களில் 51 இடத்தில் அதிரடி ரெய்டு
காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது.

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நாடு முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு எதிராக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தராகண்ட் மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகள் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
#WATCH | NIA raids underway in Punjab's Moga
— ANI (@ANI) September 27, 2023
National Investigation Agency (NIA) is conducting raids across 6 states in 3 cases in 51 locations belonging to associates of Lawrence Bambiha and Arsh Dalla gangs: NIA pic.twitter.com/LFuiqdiufR
காலிஸ்தான் பயங்கரவாதிகள், ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருக்கும் சந்தேக நபர்களின் இடங்களில் தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. இன்று (செப்டம்பர் 27) அதிகாலை தொடங்கிய இந்த சோதனைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு 6 மாநிலங்களில் 3 வழக்குகளில் லாரன்ஸ், பாம்பிஹாவின், அர்ஷ் டல்லா கூட்டாளிகளுக்கு சொந்தமான 51 இடங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது. பஞ்சாபில் 30 இடங்களும், ராஜஸ்தானில் 13 இடங்களும், ஹரியானாவில் 4 இடங்களும், உத்தரகண்டில் 2 இடங்களும், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒரு இடமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
உதம் சிங் நகர் பாஜ்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள துப்பாக்கி விற்பனை கடையில் என்ஐஏ சோதனை நடத்தியது. அங்கு உள்ள ஆயுதங்களை என்ஐஏ குழு சோதனை செய்து வருவதாக உத்தரகாண்ட் போலீசார் தெரிவித்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள கிளமென்டவுன் காவல் நிலையப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) குழு சோதனை நடத்தி வருகிறது.
அதேபோல் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உள்ள சூரத்கர் மற்றும் ராஜியசர் ஆகிய இடங்களில் என்ஐஏ குழு சோதனை நடத்தி வருகிறது, சூரத்கரில் மாணவர் அணி தலைவர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. பயங்கரவாதம்-குண்டர்கள்-கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய மூன்று தனித்தனி வழக்குகளில் நாடு முழுவதும் 51 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கனடாவில் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய 43 நபர்களின் விவரங்களையும் வெளியிட்டது. மேலும், மத்திய அரசால் கையகப்படுத்தப்படும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் விவரங்களைப் பகிருமாறு பொதுமக்களை என்ஐஏ கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களது தொழில் ரீதியான பாட்னர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
என்.ஐ.ஏ தனது பதிவில் லாரன்ஸ் பிஷ்னோய், ஜஸ்தீப் சிங், கலா ஜாதேரி என்கிற சந்தீப், வீரேந்திர பிரதாப் என்ற கலா, ராணா மற்றும் ஜோகிந்தர் சிங் ஆகியோரின் புகைப்படங்களையும் பெயர்களுடன் வெளியிட்டது. இந்த கும்பல்களில் பலர் கனடாவை தளமாகக் கொண்டுள்ளனர் என்பது அந்த அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் சண்டிகர் மற்றும் அமிர்தசரஸில் கண்டறியப்பட்ட காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனுக்கு சொந்தமான சொத்துக்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக செப்டம்பர் 21 ஆம் தேதி, தப்பியோடிய கும்பல் கோல்டி பிராருடன் தொடர்புடைய பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 1000 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

