அக்னிபத் திட்டம்... போராட்டங்களுக்கு நடுவே அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு!!
அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்திற்கான செலவு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு உள்துறை அமைச்சகம் அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, 4 ஆண்டுகளுக்கு மட்டும் வீரர்கள் ராணுவத்தில் தற்காலிகமாக பணியாற்ற முடியும் என்பதால் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
The Ministry of Home Affairs (MHA) decides to reserve 10% vacancies for recruitment in CAPFs and Assam Rifles for Agniveers.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 18, 2022
The Ministry of Home Affairs (MHA) decides to reserve 10% vacancies for recruitment in CAPFs and Assam Rifles for Agniveers.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 18, 2022
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அக்னிபத் திட்டத்தின் கீழ் மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகளில் சேரும் வீரர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் முதல் பேட்ஜ் அக்னிவீரர்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பு நீட்டிக்கப்படுவதாகவும் அமித்ஷா அறிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், தெலுங்கானா என இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு 4 ஆண்டுகள் தற்காலிகமாக பணியாற்றுவார்கள். பின்னர், அவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அவர்கள் ராணுவத்தில் நிரந்தர வீரர்களாக பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும்.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு ராணுவத்திற்கு தயாராகி வரும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்