மேலும் அறிய

Aditya L1 Countdown : நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1.. தொடங்கியது கவுண்ட்-டவுன்..

சூரியனை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள, ஆதித்யா எல்1 மிஷனுக்கான கவுண்டவுன் இன்று காலை சரியா 11.50 மணிக்கு தொடங்கியது.

சூரியனை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள, ஆதித்யா எல்1 நாளை காலை சரியாக 11.50 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. 40 நாட்கள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் கால்தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமை இதன் மூலம் இஸ்ரோவிற்கு கிடைத்தது. நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அந்த திட்டம்தான் ஆதித்யா எல்1. இது  தொடர்பாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் தான் சூரியன். அதன்படி, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் என்பது 150 மில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த ஆதித்யா எல்1, சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட  தூரத்தில் செயற்கைகோளை நிலைநிறுத்தி, அதன் மூலம் சூரியனின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்1 விண்கலம் பயணிக்க உள்ள மொத்த தூரம் 1.5 மில்லியன் கிலோ மீட்டர்.  இந்த இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான 24 மணி நேர கவுண்ட் - டவுன் இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.

சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் ஆதித்யா எல்1 –ல் உள்ளன.

2011 ஆம் ஆண்டில், ஆதித்யா-எல்1 மிஷனுக்காக சுமார் 380  கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் இது தொடரபான அதிகாரப்பூர்வ தகவல் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே சூரியனை ஆராய பிரத்யேக செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. அதில், கடந்த 2017ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் பார்க்கர் சோலார் ப்ரோப் செயற்கைக்கோள் அதிகபட்சமாக, புவியிலிருந்து 8.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் சென்று சூரியனை ஆய்வு செய்து உள்ளது. இந்த வரிசையில் தற்போது இந்தியா இணைய உள்ளது. ஆனால், மற்ற நாடுகளை காட்டிலும் மிகக் குறைந்த செலவிலேயே ஆதித்யா எல்1 திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWSCSK Vs RCB Match | ஈ சாலா கப் நம்தே RCB FANS நூதன வழிபாடு மாரியம்மா மாரியம்மாDhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Malavika Mohanan : தோழியுடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan : தோழியுடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Embed widget