Karnataka Assembly Election: சூடுபிடிக்கும் கர்நாடகா தேர்தல் களம்.. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி..
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஏற்கனவே 124 வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தற்போது 42 வேட்பாளர்களை அறிவித்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10 தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து கட்சிகள் தரப்பில் தீவிரமாக தேர்தலை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என களத்தில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடியும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பல முறை பல்வேறு திட்டங்களுக்காக வருகை தந்துள்ளார். அதே வேலை இழந்த ஆட்சியை எப்படியாவது மீண்டும் கைபற்ற வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இரண்டு கட்சிகள் மட்டுமல்லாமல் ஜனதாதளம் (எஸ்) மற்றும் ஆம் ஆத்மியும் களத்தில் இறங்குகிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பா.ஜ.க தரப்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காங்கிர்ஸ் கட்சி தரப்பில் மார்ச் 25ஆம் தேதி முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது. அதில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர்களை அறிவித்து பட்டியலை வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்ட பட்டியலில் 42 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். மொத்தம் 166 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AIADMK: “ஏப்ரல் 16ல் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்” - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு