மேலும் அறிய

AIADMK: “ஏப்ரல் 16ல் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்” - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.

ஏப்ரல் 16 ஆம் தேதி அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்  நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் பொதுச்செயலாளராக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7 ஆம் தேதி மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என முதலில் அறிவிப்பு வெளியாகி அது ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதே தேதியில் செயற்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டு, அதுவும் ஒரு சில காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி நண்பகல் 1.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக மேல்முறையீட்டு வழக்கு 

கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்ட நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.  இதனைத் எதிர்த்து உயர்நீதிமன்றத்தை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு  நாடியது. 

ஆனால் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தது. ஆனால் தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து குறிப்பிடப்படாமல் இருந்தது. இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். அதேசமயம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட தனி நீதிபதி குமரேஷ் பாபு  ஓபிஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தார். 

இந்த தீர்ப்பு கிடைத்தவுடன் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தனி நீதிபதி தீர்ப்பால் அதிருப்தியடைந்த ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது.இதன் இறுதி விசாரணை ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி இன்று கைதா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை
Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி இன்று கைதா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget