Telangana Stadium Collapse: இடிந்து விழுந்த ஸ்டேடியம் மேற்கூரை! உடல் நசுங்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு - தெலங்கானாவில் சோகம்!
தெலங்கானாவில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கம் மேற்கூரை இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Telagana Stadium Collapse: தெலங்கானாவில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள் விளையாட்டு அரங்கம்:
தெலங்கானா மாநிலம் ரங்காரரெட்டி மாவட்டத்தில் உள்ள மொயினாபாத் அருகே இருக்கும் கனகமாமிடி கிராமத்தில் டேபிள் டென்னிஸ் அகாடமியின் உள்விளையாட்டு அரங்கம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்நது. அங்கு சுமார் மூன்று மாதங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இந்த கட்டுமான பணியில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்துள்ளதாக தெரிகிறது.
#WATCH | Telangana: Two people died, 10 injured as an under-construction private indoor stadium collapsed in Moinabad in Rangareddy district.
— ANI (@ANI) November 20, 2023
According to Rajendernagar DCP, Jagdeeshwar Reddy, "2 died, around 10 injured after a private indoor stadium which is under construction… pic.twitter.com/REEuDvSWY0
இடிந்து விழுந்த மேற்கூரை:
அப்போது, கட்டிடத்தின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுமார் 12 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி கொண்டனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், அங்கு இடிபாடுகளுக்கு சிக்கி உள்ளவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், 2 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "கட்டுமானத்தில் உள்ள தனியார் உள்விளையாட்டு அரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் ஒருவர் மட்டும் உடல் மீட்கப்பட்டது. இடிபாடுகளில் இருந்து மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறார். படுகாயம் அடைந்தவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றனர்.
மேலும் படிக்க