தெலங்கானா முதல் மத்திய பிரதேசம் வரை.. உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம்
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், குவஹாத்தி உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.

மத்திய அரசு, நீதித்துறைக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமித்துள்ளனர்.
அரசியல் சாசனம் அளித்துள்ள அதிகாரத்தின் படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், குவஹாத்தி உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.
தெலங்கானா முதல் மத்திய பிரதேசம் வரை:
அதன்படி, தெலங்கானா உயர் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் கௌஷ் மீரா மொகைதீன், சலபதிராவ், வகிடி ராமகிருஷ்ணா ரெட்டி, கடிபிரவின் குமார் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் புஷ்பேந்திர யாதவ், ஆனந்த்சிங் பராவத், அஜய்குமார் நிராங்காரி, ஜெய்குமார் பிள்ளை, ஹிமான்ஷு ஜோஷி, நீதித்துறை அதிகாரிகள் ராம்குமார் சௌபே, ராஜேஷ்குமார் குப்தா ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமனம்:
இதேபோல் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு நீதித்துறை அதிகாரிகள் அலோக் அசோதி, ரத்னேஷ் சந்திர சிங், பகவதி பிரசாத் ஷர்மா, பிரதிப் மிட்டல் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
In exercise of the power conferred by the Constitution of India, after consultation with Chief Justice of India, the President is pleased to appoint the following Judges/ Additional Judges in the High Courts:- pic.twitter.com/WYrYsMaMWA
— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) July 28, 2025
குவஹாத்தி உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் அஞ்சன்மோனி, ராஜேஷ் மசும்தார், நீதித்துறை அதிகாரிகள் பிரஞ்சல் தாஸ், சஞ்சீவ்குமார் ஷர்மா ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?





















