மேலும் அறிய

கட்சி சின்னம் காரா இருந்தாலும் அவருக்கு சொந்தமா ஒரு கார் கூட இல்லையாம்... கேசிஆரின் சொத்து விவரம்

நவம்பர் 2ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு வங்கிகளில் 11.63 கோடி ரூபாய் டெபாசிட் வைத்திருப்பதாக தேர்தல் பத்திரத்தில் கே.சி.ஆர் குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானாவை கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தெலங்கானா மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். வரும் நவம்பர் 30ஆம் தேதி, அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற கே.சி.ஆர் முனைப்பு காட்டி வருகிறார்.

வியக்க வைக்கும் தெலங்கானா முதலமைச்சரின் சொத்து விவரம்:

இதனால், கஜ்வேல் மற்றும் கமாரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் கே.சி.ஆர் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்த கே.சி.ஆர், தன்னுடைய சொத்து விவரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதில், பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.

தன்னுடைய கட்சி சின்னம் காராக இருந்தாலும் கே.சி.ஆரின் பெயரில் ஒரு கார் கூட பதிவு செய்யப்படவில்லை. ஆனால், குடும்ப சொத்தாக 14 வாகனங்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார். அவை அனைத்துமே வேளாண் தொழிலுக்காக முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது என தேர்தல் விவரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 2ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு வங்கிகளில் 11.63 கோடி ரூபாய் டெபாசிட் வைத்திருப்பதாக கே.சி.ஆர் குறிப்பிட்டுள்ளார். இது, 2018ஆம் ஆண்டு தேர்தலின்போது தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் காட்டிய 5.63 கோடி ரூபாயை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

இவ்வளவு கடனா?

அவரது மனைவி கல்வகுந்த்லா ஷோபா பெயரில் உள்ள அசையும் சொத்துக்கள், 2018ஆம் ஆண்டில் 94.59 லட்சம் ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் 6.29 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதை தவிர்த்து, 2.8 கிலோ தங்கம் மற்றும் வைரங்கள் உள்ளிட்ட நகைகளை சொந்தமாக வைத்துள்ளார். இதன் மதிப்பு 1.49 கோடி ரூபாயாகும். இதன் மூலம், மொத்த அசையும் சொத்துக்கள் 7.78 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 9.81 கோடி ரூபாயாகும்.

கே.சி.ஆருக்கு 17.27 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் அவரது குடும்பத்துக்கு 7.23 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, ஜூலை மாதம், சித்திப்பேட்டை மாவட்டம் மார்கூக் மண்டலம் வெங்கடாபூர் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை 28.47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கினார். 

இதன் மூலம், 53.3 ஏக்கர் நிலம், கே.சி.ஆரின் குடும்பத்தின் பெயரில் உள்ளது. அதன் மொத்த மதிப்பு 1.35 கோடி ரூபாயாகும்.  தேர்தல் பத்திரத்தில் தான் ஒரு விவசாயி என்றும் கல்வி தகுதி பி.ஏ. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவை அனைத்தும் தெலங்கானா மாநில போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.                                                                                                                   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget