CM Chandrasekara Rao : பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை புறக்கணித்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ்..
தெலங்கானாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார்.
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார்.
தெலங்கானாவில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி ரூ. 11 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் இந்த நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி ஹைதராபாத் பேகம்பேட்டை விமான நிலையத்தில் வந்தபோது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவரை வரவேற்க செல்லவில்லை. அதேபோல் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளார்.
இன்று காலை ஹைதராபாத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, 11,300 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். குறிப்பாக செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காலை 11:45 மணிக்கு பிரதமர் மோடி செகந்திராபாத் ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு எய்ம்ஸ் பீபிநகர் மற்றும் ஐந்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மறுத்து விட்டார். பிரதமரின் நிகழ்ச்சியை புறக்கணிப்பது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். மற்ற மாநிலங்களில் பா.ஜ.கவிற்கு எதிராக கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. பாஜகவை எதிர்க்கும் பிராந்திய கட்சிகளின் தலைவர்களில் சந்திரசேகர் ராவ் முக்கிய இடத்தில் உள்ளார். இதனால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்து புறகணித்து வருகிறார்.
ஹைதராபாத் நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் சென்னைக்கு வருகை தருகிறார். சென்னையில் புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை கோவை இடையே அதி விரைவு ரயிலான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் கலந்துக்கொள்கிறார். மாலை பல்லாவரத்தில் பொது நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
மோடி இன்று சென்னை வருவதை ஒட்டி 22 ஆயிரம் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
PM Modi Visit Chennai: மீண்டும் அண்ணா பெயரைக் கொண்டது சென்னை விமான நிலையம்..
PM Modi: சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு.. களமிறங்கிய காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி..