மேலும் அறிய

TN Corona LIVE Updates: தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 364 நபர்கள் உயிரிழப்பு

கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.

Key Events
tamilnadu corona live updates may 18 TN Corona LIVE Updates: தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 364 நபர்கள் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்

Background

தமிழகத்தில் கொரோனா வைரசின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இன்று கொரோனா வைரசின் தாக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 59 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் 364 நபர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிய உச்சமாக 364 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

20:47 PM (IST)  •  18 May 2021

கொரோனா வைரசுக்கு தமிழகத்தில் ஒரே நாளில் 364 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இன்று கொரோனா வைரசின் தாக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 59 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் 364 நபர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிய உச்சமாக 364 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

17:41 PM (IST)  •  18 May 2021

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தேவையின்றி வெளியே சுற்றினால் முகாம்களுக்கு செல்ல நேரிடும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“ கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டலத்திற்கு இரண்டு எண்ணிக்கையில் மண்டல அமலாக்கக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது நாள்தோறும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதத் தொகையையும், விதிகளை மீறி நடத்தப்படும் கடைகளை மூடி சீல் வைத்து அதன் உரிமையாளர்களிடம் அபாரதத்தையும் வசூலித்து வருகிறது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி  செய்ய சென்னை மாநகராட்சியால் 200க்கும் மேற்பட்ட முன்கள தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  கொரோனா தொற்று உறுதி செய்ய்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தாரும் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி, அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் வருகிறது. இந்த செயலினால் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மருத்துவர் அறிவுறுத்திய நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதனை மீறி வீடுகளை விட்டு வெளியே வருபவர்களிடம் சென்னை மாநகராட்சி  மூலம் முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும், இரண்டாவது முறை மீண்டும் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 044 25384520 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். “

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுளது.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
உயிர்பெற்ற ஆறு; சொந்த செலவில், தனி ஆளாய் குப்பை கால்வாயை நீர்நிலையாக மாற்றிய மாணவன்!
உயிர்பெற்ற ஆறு; சொந்த செலவில், தனி ஆளாய் குப்பை கால்வாயை நீர்நிலையாக மாற்றிய மாணவன்!
புது டைம் டேபிள்! திருச்சி, சபரி எக்ஸ்பிரஸ் உட்பட 8 முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ!
புது டைம் டேபிள்! திருச்சி, சபரி எக்ஸ்பிரஸ் உட்பட 8 முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ!
18 மாதங்களில் புது ரூட்! காஞ்சிபுரம் - அரக்கோணம் விரைவு சாலையில் பறக்க ரெடியா?
Chennai-Bangalore Expressway: 18 மாதங்களில் புது ரூட்! காஞ்சிபுரம் - அரக்கோணம் விரைவு சாலையில் பறக்க ரெடியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Embed widget