மேலும் அறிய

“அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பொதுவாழ்வு அமைய வேண்டும்” - ஜனாதிபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்ட்ரில், “மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரவுபதி முர்மு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்ட்ரில், “மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரவுபதி முர்மு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் திகழவும், அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அவரது பொதுவாழ்வு அமைந்திடவும் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

யார் இந்த திரௌபதி முர்மு:

நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியான குடியரசு தலைவராக திரௌபதி முர்மு 2022 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் தேதி  காலை 10:15 மணிக்கு பதவியேற்று கொண்டார். இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அவருக்கு பதவி  பிரமாணம் செய்து வைத்தார்.

64 வயதான திரெளபதி முர்மு, எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து வரலாறு படைத்தார். முதல் பழங்குடியினராகவும், நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெறுமையையும் பெற்றவர். 2015 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெறுமையும் முர்முவையே சாரும்.

ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முர்மு, பிஜு ஜனதா தளம், பாஜக ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி செய்தபோது நவீன் பட்நாயக் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஒடிசா அரசில் போக்குவரத்து, வணிகம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற அமைச்சகங்களை கையாண்ட பல்வேறு நிர்வாக அனுபவத்தை கொண்டவர் முர்மு. கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய முர்மு, பின்னர் ராய்ரங்பூர் தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி ஏற்கும் போது முர்மு, “பல ஆண்டுகளாக வளர்ச்சி இல்லாமல் இருந்த ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், என்னைத் அவர்களின் பிரதிபலிப்பாகப் பார்க்க முடிகிறது என்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. இது கோடிக்கணக்கான பெண்களின் கனவுகள் மற்றும் திறனை பிரதிபலிக்கிறது" எனக் கூறினார்.

மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றிய போது, “சுதந்திரத்தின் 75வது சுதந்திர தின ஆண்டில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி. இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம். 2047ம் ஆண்டிற்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட முழு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது” என தெரிவித்தார்.

குடியரசு தலைவரும் – தமிழ்நாட்டு பயணமும்:

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிப்ரவரி மாதம் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார். அதன்பின் அங்கிருந்து கோவையில் இருக்கு ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்துக்கொண்டார்.

அதனை தொடர்ந்து மார்ச் மாதம் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். குமரியில்  பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளத்துக்கு சென்ற குடியரசுத் தலைவர் அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்வையிட்டார். இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட குடியரசு தலைவர் ஜூன் மாத கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டி சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்க வருகை தர இருந்தார். ஆனால் அவரின் வெளிநாட்டு பயணம் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget