“தொடர்ந்து கண்காணிப்பேன்.. சிறு தவறென்றாலும் நடவடிக்கை” - கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்..!
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

Background
தமிழ்நாட்டில் வடக்கு கடலோரத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
“தொடர்ந்து கண்காணிப்பேன்.. சிறு தவறென்றாலும் நடவடிக்கை” - கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்..!
மேயர் என்பது பதவியல்ல மேயர் என்பது பொறுப்பு.
உள்ளாட்சியை நான் கண்காணித்து கொண்டே இருப்பேன். கண்காணிப்பது மட்டுமல்ல எங்காவது சிறு தவறு நடந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன். இது அச்சுறுத்துவதற்கால அல்ல.
மக்கள் நம்மை நம்பி நமக்கு இந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள். அந்த மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக.
மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுவோம் - மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து முதல்வர் பேச்சு: -
பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் சிலர் செய்த நடவடிக்கைகள் என்னை வருத்தமடைய செய்தது.
தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு எனது பாராட்டுகள். பாராட்டும் வகையில் பணியாற்ற வேண்டும்.





















