NEET Ban: நீட் விலக்கு மசோதா... தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்
நீட் விலக்கு மசோதா தொடர்பாக மறு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
நீட் மசோதா:
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இம்மசோதாவானது ஆளுநரின் மூலம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
விளக்க கடிதம்:
அதனை தொடர்ந்து நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் மத்திய அரசு ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு விளக்கம் கேட்டது. அதற்கு தமிழ்நாடு அரசும் பதிலளித்திருந்தது.
தற்போது, மீண்டும் விளக்கம் கேட்டு ஆயுஷ் அமைச்சகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில், நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஓரிரு வாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram