Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,65,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,6,895 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 870 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து, சென்னையில் 410 பேரும், ஈரோடு 741, சேலம் 485, திருப்பூர் 434, தஞ்சாவூர் 372, செங்கல்பட்டு 286, நாமக்கல் 274, திருச்சி 231, திருவள்ளூர் 191, கடலூர் 179, திருவண்ணாமலை 178, கிருஷ்ணகிரி 155, நீலகிரி 139, கள்ளக்குறிச்சி 134, மதுரை 125, ராணிப்பேட்டை 116, குமரி 110, நாகை 107, தருமபுரி 104, விழுப்புரம் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின் தடைக்கு அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ராமதாஸ்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மின் தடை கிண்டல்: டாக்டர் ராமதாஸிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எதன் அடிப்படையில் அரசுப்பணிகளில் வெளிமாநிலத்தவருக்கு வேலை வழங்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கபடும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்தார். வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக எத்தகைய நடைமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டது என்பதும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் உறுதி அளித்தார். தமிழ்நாட்டில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியது.
2.14 கோடிக்கும் அதிகமான (2,14,90,297) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இங்கிலாந்து சவுத்தாம்டனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் இறுதிப் போட்டி டிராவில் முடிவடைந்தது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம், நீட் தேர்வு நடத்துவது குறித்து தேர்வு முகமையே முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தது.
இனி ஆன்லைன் க்ளாஸ் இப்படித்தான் நடக்கவேண்டும்: தமிழக அரசின் 11 கட்டளைகள்..!
ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவர்களும், ஆசிரியர்களும் ஆடை ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, ஹாட்லைன், மின்னஞ்சல் வசதி, மாணவர்களுக்காக மாநில கட்டுப்பாட்டு அறை, பள்ளி வளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது.