Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல்,சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகராகப் பணிபுரிய இனி பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என அந்தத்துறையின் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் 9-ஆம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
டாசிலிசுமாப், அம்ஃபோடெரிசின் பி ஆகிய மருந்துகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த 5% சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) செப்டம்பர் 30-ஆம் தேதிவரை நீக்க 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.மேலும், மருத்துவப் பிராணவாயு, பிராணவாயு செறிவூட்டிகள் (தனிநபர் இறக்குமதி உட்பட), செயற்கை சுவாசக் கருவிகள், பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் (தனிநபர் இறக்குமதி உட்பட) முதலியவற்றிற்கு இருந்துவந்த 12% ஜிஎஸ்டி வரியை, 5 % ஆகக் குறைக்கக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
பல்ஸ் ஆக்சிமீட்டர், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனைக் கருவிகளுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு!
ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை பார்பொரா க்ரேய்ச்சிகோவா (Barbora Krejcikova) தட்டிச் சென்றார். இது ஒற்றையர் பிரிவில் அவரது முதலாவது கிராண்ட்ஸ்லாம் கோப்பை ஆகும்.
சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளித்து இருக்கிறோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாகவும் கூறினார்.
முதல் தடுப்பூசி 70 சதவீதம் பாதுகாப்பு தரும்; வேலூர் கிறிஸ்தவ கல்லூரி ஆய்வில் தகவல்!
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து 6 ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் கொரானா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆர் மற்றும் ஹைதராபாத்தின் லக்சாய் லைஃப் சயின்சஸ் தனியார் நிறுவனத்திற்கு, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் கால்சிகைன் மருந்தை பயன்படுத்துவதற்கான இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 719 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது. பீகாரில் அதிகபட்சம் 111 டாக்டர்கள் உயிரிழந்தனர். கொரோனா முதல் அலையின்போது மொத்தம் 736 டாக்டர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 15-ஆம் தேதி சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட 13 நபர்கள் அடங்கிய குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.
CBSE Class 12 : சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் எப்போது வெளியாகும்?