1st T20I - 26 Jun 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
2nd T20I - 27 Jun 2021, Sun up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada

காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

தமிழகத்தில் கடந்த  24 மணி நேரத்தில் 483 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 25,000 ஐக் கடந்துள்ளது. 

FOLLOW US: 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

* மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை முரண்பாடான, காரணமற்ற தன்னிச்சையான ஒன்றாக இருக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மத்திய பட்ஜெட்டில் கொரோனாவுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.35000 கோடியில் ஏன் 18-44 வயதினருக்கான தடுப்பூசிகளுக்காகச் செலவிடவில்லை. இதுநாள் வரை இந்தப் பணத்தை அரசு எவ்வாறு செலவு செய்தது. 

* குழந்தைகள் மீதான பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் மருத்துவ சோதனை பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் துவங்கியது. 

காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

லேசாக தெரிந்த இரும்புத்துண்டு.. தோண்டிப்பார்த்தால் பீரங்கி - வேலூரில் கண்டுபிடிப்பு!

*தேசியத் தகுதி & நுழைவுத் தேர்வுகளை இரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் இரத்து என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை. நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள கொரோனா சூழலை ஒன்றிய கல்வித்துறை பயன்படுத்த நினைக்கிறது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்  

 * 49 காவல்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

49 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் : 14 பேருக்கு பதவி உயர்வு

*   தமிழகத்தில் கடந்த  24 மணி நேரத்தில் 483 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 25,000யை கடந்துள்ளது. 

* CycloneTauktae-ல் காணாமல் போன 21 மீனவர்களை 15.05.2021 முதல் ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவற்படையின் மூலம் தேடியும் கண்டுபிடித்திட இயலாத நிலை உள்ளது. எனவே, அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடும் வகையில் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

* உத்திரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் திட்டமிட்டப்படி அடுத்த ஆண்டு நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மே மாதத்தில் 10 ஆயிரம் பேரின் உயிரைப் பறித்த கொரோனா தொற்று : அச்சத்தில் மக்கள்

*கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் 07.06.2021 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது, பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள்/தேர்வுகள் நடப்பதாலும், தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகளுக்காக கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

’தமிழ்நாட்டில் பவர்கட் ஏற்பட்டு வருவது ஏன் தெரியுமா?’ - அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம் 

* செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர, கோரிக்கை விடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனுக்கு, கடிதம் எழுதியுள்ளார்.

Tags: Tamil Nadu News updates Tamil News headlines LAtest news in tamil Tamil Nadu Latest News News Headlines in tamil 12th Exam announcement ABP Tamil News Headlines Today's News updates Tamil nadu 12th Exam announement

தொடர்புடைய செய்திகள்

Covid-19 Data Tracker : 81 நாட்களுக்குப் பிறகு 60 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு..!

Covid-19 Data Tracker : 81 நாட்களுக்குப் பிறகு 60 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு..!

Corona Third Wave: அடுத்த 6-8 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை - எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்..!

Corona Third Wave: அடுத்த 6-8 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை - எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்..!

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

KK Shailaja | கேரளாவின் ஷைலஜா டீச்சருக்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் உயரிய விருது

KK Shailaja | கேரளாவின் ஷைலஜா டீச்சருக்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் உயரிய விருது

வைரல் வீடியோவை கையில் எடுத்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு செய்த அரசு!

வைரல் வீடியோவை கையில் எடுத்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு செய்த அரசு!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE : ஊரடங்கு 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு..! 3 வகை மாவட்டங்களாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!

Tamil Nadu Coronavirus LIVE : ஊரடங்கு 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு..! 3 வகை மாவட்டங்களாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!

தஞ்சாவூர் : ”மாஸ்க் இல்லையா? உள்ள வராதே!” : கொரோனா விழிப்புணர்வு தரும் தலையாட்டி பொம்மைகள்..

தஞ்சாவூர் : ”மாஸ்க் இல்லையா? உள்ள வராதே!” : கொரோனா விழிப்புணர்வு தரும் தலையாட்டி பொம்மைகள்..

காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அரியவகை சூல கற்கள் கண்டுபிடிப்பு..!

காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அரியவகை சூல கற்கள் கண்டுபிடிப்பு..!

மயிலாடுதுறை: திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோவில் கைது..!

மயிலாடுதுறை: திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோவில் கைது..!