மேலும் அறிய
Advertisement
Headlines Today June 24: நேற்று நடந்தவை முதல் இன்றின் திட்டங்கள் வரை.. அனைத்தும் கோர்வையாய்.. தலைப்பு செய்திகளாய்!
Headlines Today June 24: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
தமிழ்நாடு:
- அரசுப்பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
- திருவிழாக்களில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும்; கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை - தலைமை நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவு
- கலைஞர் நூற்றாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று மெகா மருத்துவ முகாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.
- திருப்பூர் பனியன் சந்தையில் திடீர் தீ விபத்து: 50 கடைகள் எரிந்து நாசம்
- மக்களுக்கு பயன்தரும் வகையில் நினைவிடங்கள் மாற்றப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
- அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களுக்கென ஒரு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கம் - அமைச்சர் க.பொன்முடி
- அமைச்சர் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதால், மருத்துவர்களின் வேண்டுகோளின் படி, அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திருமதி மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
இந்தியா:
- நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து போராட முடிவி; பாட்னாவில் நடந்த 17 எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
- பகல் நேரத்தில் சலுகை; இரவு நேர மின்சார பயன்பாட்டுக்கு 20 சதவீத அதிக கட்டணம் - மத்திய அரசு புதிய திட்டம்
- குறைந்தவிலையில் இணையதள வசதி கொடுப்பதால் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
- கேரளாவில் மக்களின் உயிரை பறிக்கும் தெரு நாய்களை கொல்ல சட்ட திருத்தம் கொண்டு வர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
- பாட்னாவில் நடந்தது போட்டோ செஷன்; உங்களால் பாஜகவை எதுவும் செய்ய முடியாது - அமித் ஷா
- மத்தியில் ஆட்சியில் உள்ள அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட அனைத்து தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
- அமலாக்கத்துறை ,சிபிஐ முகமைகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு, தங்களது மாநிலத்தில் தொழில் தொடங்க தொழிலதிபர் எலன் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
உலகம்:
- காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, இந்திய ரயில்வே நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவது தொடர்பாக இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் - பிரதமர் மோடி
- நீர்மூழ்கி கப்பலை தேடி கண்டிபிடிக்க கடந்த 5 நாள்களாக மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில், கப்பல் வெடித்து சிதறிவிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சீனாவில் பிரபல உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சுமார் 31 பேர் உயிரிழப்பு
- பிரபல கொரியப் பாடகரான சோ சுங் பாங் தற்கொலை செய்துகொண்டார்.
விளையாட்டு:
- இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியில் ஆர்.சி.பி. வீரர் ஜேக்ஸ் 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் விளாசல்
- வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான இந்திய அணியில் இருந்து புஜாரா, உமேஷ் யாதவ் நீக்கம்
- ஜூலை 12ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடரில் ஒருநாள் மட்டும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை கிரிக்கெட்டுக்கும் ரோகித் சர்மாவே கேப்டனாக தொடரவுள்ளார்.
- இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேலத்தில் அமைத்துள்ள புதிய மைதானத்தை, தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion