(Source: ECI/ABP News/ABP Majha)
TN Corona Updates: கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்கு ஆதார் கட்டாயமல்ல - UIDAI அறிவிப்பு..
கோவாக்சின் தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய கோவிட்-19 சுரக்ஷா இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது
LIVE
Background
தற்சார்பு இந்தியா 3.0-ன் கீழ், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளின் தயாரிப்பை மேம்படுத்துவதற்காக கோவிட்-19 சுரக்ஷா இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் கோவாக்சின் தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திறன் மேம்படுத்தப்பட்டு, வரும் செப்டம்பர் மாதத்திற்கு 10 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
ஹப்கைன் பயோ பார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் இம்யுனலாஜிக்கல்ஸ் லிமிடெட் - , பாரத் இம்யுனலாஜிக்கல்ஸ் அண்டு பயலஜிக்கல்ஸ் லிமிடெட் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்காக இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை நிதி உதவி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,53,299 பேர் குணமடைந்துள்ளனர். 3,26,098 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இதன் மூலம் கடந்த ஐந்து நாட்களில் நான்காவது முறையாக அன்றாட புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கூட்டமாக ஆவி பிடித்தல் சரியானதல்ல - மருத்துவர், ஐ.சி.எம்.ஆர் நிபுணர் பிரப்தீப் கவுர்
No . Should be closed
— Prabhdeep Kaur (@kprabhdeep) May 16, 2021
மாநிலவாரியாக கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை..
#CoronaVirusUpdates:
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) May 16, 2021
State-wise details of Total Confirmed #COVID19 cases (till 16 May, 2021, 8 AM)
➡️States with 1-60000 confirmed cases
➡️States with 60001-680000 confirmed cases
➡️States with 680000+ confirmed cases
➡️Total no. of confirmed cases so far #StaySafe pic.twitter.com/JnPWW3b2GB
46,366 பேர் தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை
சென்னையில் 46,366 பேர் தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 2151 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கையிலும், 8354 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கையிலும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்- 19 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளில் 3793 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா பராமரிப்பு மையங்களில் 3200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, சென்னையில் பாதிக்கப்பட்டோரில் 63 சதவிகிதம் பேருக்கு மட்டும் தான் மருத்துவமனை அனுமதி தேவையில்லை என்ற நிலை உள்ளது. 37 சதவிகிதம் பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது.
இனி மருத்துவமனைகளுக்கே நேரடியாக ரெம்டெசிவிர்! - முதல்வர் மு.க ஸ்டாலின் அதிரடி
இனி மருத்துவமனைகளுக்கே நேரடியாக ரெம்டெசிவிர்வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " வருகிற 18-5-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.
இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச்சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
நோயாளிகளுக்குத் தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.
சென்னை மண்டல வாரியாக கொரோனா பரவல் விவரம்
சென்னையில் 13 மண்டலங்களில் கடந்த ஒரு வார கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் அதிகரித்து காணப்படுகிறது. சோழிங்கநல்லூர், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில் கடந்த 7- நாட்கள் சராசரி பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. மணலி, மாயவரம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் 7-நாட்கள் சராசரி பாதிப்பு விகிதம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.
திரு வி.க நகர் அதிகமான இறப்பு விகிதங்களை கொண்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக சென்னையில் கடந்த வாரத்தை விட தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் 1.3 மடங்காக அதிகரித்துள்ளது.