Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் 3,039 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை என்ன?
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை, 33,224-ஆக உள்ளது
தமிழ்நாட்டில் 3,039 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
தமிழ்நாட்டில் 3,039 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளது.
ஸிகா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை
ஸிகா வைரஸ் குறித்து தமிழ்நாட்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியைச் சேர்ந்த கர்ப்பிணி மகப்பேறு முடிந்து நன்றாக இருக்கிறார். ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகுதான் நீட் தேர்வு குறித்து பேச முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா நெறிமுறைகளை பொது மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி
ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.