TN Corona LIVE Updates: தமிழ்நாட்டில், 17000 தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
TN Corona Cases LIVE Updates: தனக்கு அறிகுறியற்ற கொரோனா என்றும், கோவிட்- 19 நெறிமுறைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து பணி செய்து வருவதாகவும் அசோக் கெலாட் ட்விட்டரில் தெரிவித்தார்.
LIVE
Background
உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தற்போதைய பிராணவாயு உற்பத்தி அளவை மாற்றியமைத்து பெருந்தொற்று சமயத்தில் உதவும் வகையில் மருத்துவ பிராணவாயுவை மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா , உர நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.
பொது, தனியார் மற்றும் கூட்டுறவு துறைகளைச் சேர்ந்த உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், அமைச்சர் இவ்வாறு கேட்டுக் கொண்டார். உர ஆலைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 50 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயு, கொவிட் நோயாளிகளுக்கு விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார் .
சென்னையில் உள்ள அனைத்து விடுதிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க முன்அனுமதி தேவையில்லை என்றும், தகவல் தெரிவித்தால் மட்டும் போதும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். முன்னதாக, கூடுதல் சிகிச்சை வசதிகளை ஏற்படுத்துவதற்காக சென்னையில் உள்ள விடுதிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிறப்பு கோவிட் சிகிச்சை மையங்களை ஏற்படுத்திக் கொள்ள மாநகராட்சி அனுமதி அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 17,000 தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
தமிழ்நாட்டில் 17,000 தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று
कोविड टेस्ट करवाने पर आज मेरी रिपोर्ट भी पॉजिटिव आई है। मुझे किसी तरह के लक्षण नहीं हैं और मैं ठीक महसूस कर रहा हूं। कोविड प्रोटोकॉल का पालन करते हुए मैं आइसोलेशन में रहकर ही कार्य जारी रखूंगा।
— Ashok Gehlot (@ashokgehlot51) April 29, 2021
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு அறிகுறியற்ற கொரோனா என்றும், கோவிட்- 19 நெறிமுறைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து பணி செய்து வருவதாகவும் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் - கமல்ஹாசன்
ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
அடுத்த 3 மாதத்திற்குள் 57 லட்சத்திற்கும் கூடுதலான டோஸ் வழங்கப்படும்
மாநில அரசுகளுக்கு அடுத்த 3 மாதத்திற்குள் 57 லட்சத்திற்கும் கூடுதலான டோஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்தியாவில் ஒரேநாளில் 3.79 லட்சம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,645 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில் 2.69 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.