TN Corona Live Updates : தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. கண்ணீரிலும், பதற்றத்திலும் காத்திருக்கும் மக்கள்..
TN Corona Cases LIVE Updates: ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம்
LIVE
Background
Corona Virus Latest News in Tamil: முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. மேலும், அனைத்துத் தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 298 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 29,272 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,62,181 ஆக அதிகரித்துள்ளது.
கண்ணீரிலும், பதற்றத்திலும் காத்திருக்கும் மக்கள்..
தமிழ்நாட்டில் தற்போது ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை,கோவை, திருச்சி,மதுரை,திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் தற்போது ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனை செய்யப்படும் அனைத்து இடங்களிலும் மக்கள் மருத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மருத்துவர், செவிலியர்-பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வரவேர்கத் தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்
மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து ஊதிய உயர்வும், காலம் சார்ந்த பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "
கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர்-பிற பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை ஊக்கத்தொகை; உயிரிழந்த 43 மருத்துவப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மருத்துவத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; அவர்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது
கொரோனா போரில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் இழப்பீடு பின்னர் ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டது தவறு. அதையே தற்போதைய அரசும் வழங்காமல் ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்!
மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து ஊதிய உயர்வும், காலம் சார்ந்த பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! " என்று தெரிவித்தார்.
மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன - ப.மாணிக்கம் தாகூர்
தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஏர்இந்தியா,இந்தியவிமானபடை விமானம் மூலம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில்," அனைத்து மாநிலங்களிலும்,நாடு முழுவதும் தினசரி நாளுக்கு நாள் கொரோனா நோய் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 25000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோய் ஏற்படுகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 50,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன, இதில் ஆக்ஸிஜன் தேவை தவிர்க்க முடியாதது. எனவே இந்த மாவட்டங்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கொள்கலன்களை வழங்குவதற்கான அவசர தேவை உள்ளது. எனவே, ஒடிசாவிலிருந்து இந்தியா விமானபடை / ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜனை விமானத்தில் கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு மதுரையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தலாம். இந்த விஷயத்தில் பிரதமர் அவர்கள் தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.
9 மாவட்டங்களில் தீவிர சிகிச்சைப் பிரவு படுக்கைகள் நிரம்பின
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தர்மபுரி, கரூர், ராணிபேட், திருபத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் தீவிர சிகிச்சைப் பிரவு படுக்கைகள் நிரம்பின. சென்னை, அரியலூர், கோயம்பத்தூர், நீலகிரி, திருவாரூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 10க்கும் குறைவான தீவிர சிகிச்சைப் பிரவு படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.
ஏற்கனவே, சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோன இறப்பு எண்ணிக்கை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 71 நாட்களில் மட்டும் 192 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 71 நாட்களில் அதன் இறப்பு விகிதம் 1.3 விகிதமாக உள்ளது. இதே கால கட்டத்தில் சென்னையின் இறப்பு விகிதம் 0.7 ஆக உள்ளது.
இந்தியா கொரோனா வைரஸ் நோய்த் தொற்று - முக்கியத் தககவல்கள்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. 4,205 பேர் கொரோன தொற்றுக்கு பலியாகியுள்ளனர். டெல்லி , மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன.
சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் இரண்டாவது நாளாக குறைவு:
தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக, புது பாதிப்பைகள விட தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் , சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதைக் காண்பிக்கிறது.
இருப்பினும், நாட்டின் முக்கிய பெருநகரங்களில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் அதிகருத்துள்ளது.