Watch Video : கண்ணாடி மேற்கூரையில் மோதி உயிரிழந்த அழகுப் பறவைகள்.. பதைபதைக்கவைக்கும் வீடியோ !
குஜராத் மாநிலத்தில் கண்ணாடி மேற்கூரையில் இடித்து 27 பறவைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதங்களில் எப்போதும் விலங்குகள், பறவைகள் தொடர்பான வீடியோ என்றால் வேகமாக வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது ஒரு பறவைகள் தொடர்பான வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அதன்படி குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில் ஒரு கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின் மேற்கூரை கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியில் ஐரோப்பிவில் புலம் பெயர்ந்து வந்த ரோஸி ஸ்டார்லிங் என்ற பறவைகள் கூட்டம் பறந்துள்ளன. அப்போது இந்த கட்டடத்தில் போடப்பட்டிருந்த கண்ணாடி மேற்கூரையில் 27 பறவைகள் மோதியுள்ளன. அவை அனைத்தும் சம்பவ இடத்திலேயே உயர்ந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
સુરતમાં પક્ષીઓનાં રહસ્યમય મોત
— Kamit solanki 🇮🇳 (@KamitSolanki) February 4, 2022
શું કાચ પર આકાશનું પ્રતિબિંબ બન્યું મોતનું કારણ ?
બિલ્ડિંગ પર લગાવેલા કાચથી મુંજાયા પક્ષીઓ
કાચ પર આકાશનાં પ્રતિબિંબને કારણે ટકરાયું પક્ષીઓનું ઝુંડ#Gujarat #Surat #birds #CCTV #Video @birdsbeaknews pic.twitter.com/VV1zpvGYrf
இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில், “இது மாதிரியான சம்பவங்கள் எப்போதும் வெளிநாடுகளில் அதிகளவில் நடப்பது வழக்கம். ஆனால் இந்தியாவில் தற்போது தான் நடைபெற்றுள்ளது. அதிலும் குஜராத்தில் முதல் முறையாக நடைபெற்றுள்ளது” என ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரோஸ் ஸ்டெர்லிங் என்ற ஐரோப்பிய பறவைகள் எப்போதும் குளிர்க்காலத்தில் ஐரோப்பியாவில் இருந்து இந்தியா வருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு இந்தியா வந்த பறவைகளில் தற்போது 27 பறவைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல விலங்கு மற்றும் பறவைகள் நல ஆர்வலர்கள் தங்களுடைய சோகத்தை பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது ; புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை