மேலும் அறிய

"மதரஸா சட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது" உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

உத்தரப் பிரதேச மதரஸா விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Madarsa Act: உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004ஐ அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 

மதரஸா கல்வி என்றால் என்ன?

அரபு, உருது, பெர்சியன் (பாரசீகம்), இஸ்லாமிய ஆய்வுகள், தத்துவங்கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான படிப்புகளே மதரஸா கல்வியாகும். இவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004 கொண்டு வரப்பட்டது. 

இந்த சட்டத்தின் மூலம் மதரஸாக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரம் மதரஸா கல்வி வாரியத்திற்கு அளிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் சுமார் 25,000 மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் 16,500 மதரஸாக்கள் உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 560 மதரஸாக்கள் அரசிடமிருந்து மானியம் பெறுகின்றன. இவற்றை தவிர, மாநிலத்தில் 8,500 அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் உள்ளன.

கமில் மற்றும் ஃபசில் என்ற பெயரில் மதரஸா கல்வி வாரியத்தால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் மதரஸாக்களால் நடத்தப்படுகிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

கடந்த மார்ச் 22 ஆம் தேதி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பின்மை கொள்கையை மீறுவதாக தெரிவித்து ரத்து செய்தது.

தனது கடமைகளை ஆற்றும்போது, மதத்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறிய  அலகாபாத் உயர் நீதிமன்றம், "மதம் சார்ந்த கல்விக்கு வாரியத்தை உருவாக்கவோ அல்லது பள்ளிக் கல்விக்கான வாரியத்தை ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தத்துவத்திற்காக மட்டும் அமைக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசு அப்படி செய்தால், இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாகும்" என தீர்ப்பு வழங்கியது.

உத்தர பிரதேச மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை மற்ற பள்ளிகளுக்கு மாற்றவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதரஸா கல்வி குறித்து உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

உ.பி. மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004ஐ ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

மதரஸா வாரியத்தின் நோக்கம் ஒழுங்குப்படுத்துவதே ஆகும். அந்த வகையில், வாரியத்தை அமைப்பது மதச்சார்பின்மையை மீறும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் சொன்னது சரியல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren PandyaSenthil Balaji Delhi Visit | TASMAC ஊழல்.. துரத்தும் ED டெல்லி பறந்த செந்தில் பாலாஜி திடீர் விசிட்! பின்னணி என்ன?Sunita Williams: 27 ஆயிரம் KM Speed! 1927 டிகிரி செல்சியஸ்! Real Wonder Woman சுனிதா வில்லியம்ஸ்DMDK Alliance DMK |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Punjab Farmers: இரவோடு இரவாக அகற்றம்..! பாஜகவிற்கு ஆதரவாக ஆம் ஆத்மி சிஎம், விவசாயிகள் கைது
Weather: இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு-  நாளைய வானிலை எப்படி?
இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை இருக்கு- நாளைய வானிலை எப்படி?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
CISF Recruitment 2025: 10-வது தேர்ச்சி பெற்றவரா? 1161 பணியிடங்கள்! மத்திய அரசுப் பணி; விவரம் இதோ!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
Rajinikanth: ரஜினியை பார்த்து பைத்தியக்காரன் என்ற பிரபல இயக்குனர்! பார்த்திபன் பகிர்ந்த ஷாக்!
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
அரசு பள்ளி மாணவர்கள் தாக்கிக்கொள்வதாகப் பரவும் காணொளி.. உண்மையா?
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
இனி பாலுக்கு பிரச்னையே இருக்காது.. விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.. தெரிஞ்சுக்கோங்க!
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
GATE Result 2025: மாணவர்களே அலர்ட்.. கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? முதலிடம் யாருக்கு?
Embed widget