CJI Chandrachud: தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
CJI Chandrachud Modi Visit: நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையே அதிகார பிரிவு என்பது இருவரும் நேரில் சந்திக்க கூடாது என்று அர்த்தமில்லை என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த புகைப்படத்தை, பிரதமர் மோடி பகிர்ந்திருந்தார். அதில் தலைமை நீதிபதி மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸுடன் இணைந்து பிரதமர் மோடி பிரார்த்தனை செய்திருந்தார்.
சர்ச்சையில் சிக்கிய தலைமை நீதிபதி:
இந்த புகைப்படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி தனது X இல் தெரிவித்ததாவது, சந்திரசூட் ஜி இல்லத்தில் விநாயகர் பூஜையில் கலந்து கொண்டேன். பகவான் ஸ்ரீ கணேஷ் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கட்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த நிகழ்வு விமர்சன வலையில் சிக்கிது. பிரதமர் மோடி, தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றுள்ளது, எதிர்மறையான போக்கை ஏற்படுத்தும் என்றும், தலைமை நீதிபதி தீர்ப்பானது பிரதமர் மோடிக்கு சாதகமாக இருக்கும் எனவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா தேர்தல் சூழலில், வழக்குகள் உள்ள நிலையில் பிரதமர் இதுபோன்ற ஒரு தனிப்பட்ட நிகழ்வை காட்சிப்படுத்துவது சரியல்ல" என்றும் அதைச் சுற்றி வதந்திகள் எழும். அந்த சூழ்நிலைக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் இடம் கொடுக்கக்கூடாது எனவும் கருத்துகள் எழுந்தன.
”நேரில் சந்திக்க கூடாது என்று அர்த்தமில்லை”
இந்நிலையில், இது குறித்து தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “ நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையே அதிகார பிரிவு என்பது இருவரும் நேரில் சந்திக்க கூடாது என்று அர்த்தமில்லை . “கணபதி பூஜைக்காக பிரதமர் எனது இல்லத்திற்குச் வந்து சந்தித்தார். நாங்கள் ராஷ்டிரபதி பவன், குடியரசு தினம் போன்றவற்றிலும் சந்திக்கிறோம். பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் நாங்கள் உரையாடி வருகிறோம். இது போன்ற சந்திப்புகள் எல்லாம், வழக்குகளில் எடுக்கப்படும் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
கணபதி பூஜை தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்திற்குச் வந்ததில் தவறு இல்லை,இதுபோன்ற பிரச்னைகளில் "அரசியல் துறையில் முதிர்ச்சி உணர்வு" தேவை எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்ட ரீதியாக தடை இல்லை என சர்ச்சைக்கு முற்று புள்ளியை, தலைமை நீதிபதி சந்திரசூட் வைத்திருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

