அரசு பணியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம்...அதிர்ந்துபோன கல்லூரி முதல்வர்..!
இந்த சம்பவம் குறித்து சிவமொக்கா சைபர் பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கர்நாடகா ஆசிரியர் தகுதித் தேர்வு - 2022க்கான அனுமதி அட்டையில் தேர்வரின் புகைப்படத்துக்குப் பதிலாக சன்னி லியோனின் படம் இடம் பெற்றதையடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கர்நாடகா கல்வித் துறை போலீஸில் புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிவமொக்கா சைபர் பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஷிவமொகா எஸ்பி மிதுன் குமார் கூறுகையில், " தேர்வு மைய பொறுப்பாளர் சன்னப்பா, கல்வித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விரிவாக விசாரணை நடத்துவோம்" என்றார்.
Case filed after Sunny Leone's picture appears on a hall ticket of Karnataka government exam candidate. he paste her pic during applying said form#Karnataka #SunnyLeone | @sagayrajp pic.twitter.com/VD1ouqZR4W
— Lallan Sharjeel (@LallanT39919882) November 9, 2022
சிக்மகளூர் மாவட்டம் கொப்பாவைச் சேர்ந்த தேர்வர் ஷிவமொகாவில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்வில் அவர் கலந்து கொண்டார்.
அவர் தேர்வில் கலந்துகொள்வதற்காக இணைய மையத்தில் தனது ஹால் டிக்கெட்டை அவர் பதிவிறக்கம் செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தவறுக்கு கல்வித்துறை பொறுப்பல்ல என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்டில் தேர்வரின் புகைப்படத்திற்குப் பதிலாக பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் புகைப்படத்தை மாநிலக் கல்வித் துறை அச்சிட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு தலைவர் பி.ஆர். நாயுடு செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார்.
நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்வர் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.
கோப்பில் எந்த புகைப்படத்தை இணைத்தாலும் கணினி எடுக்கும். அட்மிட் கார்டில் சன்னி லியோனின் புகைப்படம் இருக்கிறதா என்று நாங்கள் தேர்வரிடம் கேட்டபோது, கணவரின் நண்பர் அவரது தகவலை பதிவேற்றியதாக அவர் கூறினார்" என்றார்.
ருத்ரப்பா கல்லூரியில், தேர்வர் ஒருவர் நடிகையின் புகைப்படம் அச்சிடப்பட்ட ஹால் டிக்கெட்டைக் எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து, அந்த கல்லூரியின் முதல்வர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
சமீபத்தில், பீகார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அம்மாநில ஆளுநர் பகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றது சர்ச்சையை கிளப்பி இருந்தது.
இதே போன்ற சம்பவம், சில ஆண்டுகளுக்கு முன்பு முசாபர்பூரில் அரங்கேறியது. மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளாத பாலிவுட் நட்சத்திரங்களான இம்ரான் ஹாஷ்மி மற்றும் சன்னி லியோன் என்ற பெயர்கள் முறையே அப்பா மற்றும் அம்மாவுக்கான பெயர்கள் இடம் பெற வேண்டிய இடத்தில் இடம்பெற்றிருந்தன.