மூளைச்சாவு அடைந்த 70வயது மூதாட்டி: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் 3 பேருக்கு புதுவாழ்வு
முதியவர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது பொதுவாக மிகவும் சவாலான ஒன்றாகும்.
புனேயில் உள்ள சாயத்ரி மருத்துவமனையில் 70 வயது பெண்ணின் கல்லீரலை, 50 வயது பெண்ணிற்கு பொருத்தி மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் மூன்று பேருக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது.
மூளைச்சாவு
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி டெக்கானில் உள்ள சாயத்ரி மருத்துவமனையில் ஓட்டுநர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. உள் இரத்தப்போக்கு காரணமாக 70 வயதான பெண் பிப்ரவரி 18ஆம் தேதி மூளைச் சாவு அடைந்தார். இவர்களின் உடல் உறுப்பு தானம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிக்கை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையின் மருத்துவக் குழு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது.
கல்லீரல் மற்றும் பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் தலைவர் டாக்டர் பிபின் விபூதே கூறுகையில், “மூத்த குடிமக்களின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது பொதுவாக ஒரு சவாலான பணியாகும். ஏனெனில் வயதான மற்றும் உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும். 35 வயதான நபரின் கல்லீரல், கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட 60 வயதான சாங்லியைச் சேர்ந்த ஆண் நோயாளிக்கு மாற்றப்பட்டது. புனேவை சேர்ந்த 61 வயது பெண் ஒருவருக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டது” என்று கூறினார்.
உறுப்பு மாற்று சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் தற்போது அதிகம் பெருகிவருகிறது.
மேலும்..
Russia Ukraine War: விமானத்தளங்களை அழிச்சிட்டோம்.. மார்தட்டிய ரஷ்யா.. உக்ரைன் கொடுத்த பதிலடி என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்