மேலும் அறிய

Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

ஒமிக்ரான் வைரஸ் பரவலால் தேர்தல் பேரணிகள், பிரசாரங்களை நிறுத்த உத்தரவிடவும், சட்டசபை தேர்தல்களை ஒத்திவைக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று சஞ்சய் யாதவ் என்பவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. நீதிபதி சேகர் குமார் யாதவின் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையின்போது ஒமிக்ரான்(Omicron) பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர்.

நீதிபதிகள் கூறும்போது, சீனா, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பாதிப்புகள் அதிகரிக்கும்போது முழுமையாக அல்லது பகுதிநேரமாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். இண்டாவது அலையின்போதே நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பலரும் இதனால் உயிரிழந்தனர்.

Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் மிகவும் அருகில் உள்ளது. சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற முடியாத இடங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை அணிதிரட்டுவதை உயர்நீதிமன்றம் கவனித்து வருகிறது.

இதை சரியான நேரத்தில் நிறுத்தாவிட்டால், இதன் விளைவுகள் இரண்டாவது அலையை விட மோசமாக இருக்கும். இதனால், இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் பேரணிகள் மற்றும் மக்கள் கூடுவதை நிறுத்தவும்,  தங்களது தேர்தல் பிரசாரங்களை தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் மூலமாக மேற்கொள்ள அரசியல் கட்சிகளை அறிவுறுத்த வேண்டும்.

Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை வாய்ப்பிருந்தால் மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்கலாம். ஏனென்றால் மக்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்த முடியும்.

கொரோனா தடுப்பூசி பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு பேரணிகள், கூட்டங்களை நிறுத்துவது மற்றும் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை ஒத்திவைப்பது குறித்து பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்.

நாட்டிலேயே அதிக சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணங்களை மேற்கண்ட மாநிலங்களில் மேற்கொள்ள உள்ளனர்.

Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

ஆனால், நாட்டில் தற்போது ஒமிக்ரானின் தீவிரத்தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, அலகாபாத் நீதிமன்றம் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்றும், அரசியல் பேரணிகள், கூட்டங்கள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Ashwin on Virat - Shasthri duo: அஷ்வின் மட்டும்தான் தூக்கி எறியப்பட்டாரா? கோலி - சாஸ்திரி கூட்டணியின் இன்னொரு முகம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget