மேலும் அறிய

Railway Accident: ”ஓகே” சொன்னது குத்தமா..! ரயில்வே துறைக்கு ரூ.3 கோடி இழப்பு, ஸ்டேஷன் மாஸ்டருக்கு விவாகரத்து

Railway Accident: ஸ்டேஷன் மாஸ்டரின் ஒற்றை வார்த்தையால் ரயில்வே துறைக்கு 3 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

Railway Accident: வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியிடம் இருந்து விவாகரத்தும் பெற்றுள்ளார்.

ஒற்றை வார்த்தையால் வந்த வினை

ரயில்வேதுறையை சேர்ந்த ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவரும், அவரது மனைவியும், ஒரே வார்த்தையால் நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளனர். அவர்கள் இடையேயான குடும்பச் சண்டையால் ரயில்வேதுறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதோடு, திருமண வாழ்க்கையே குழப்பத்தில் முடிந்துள்ளது. சர்ச்சைக்குள்ளான ஸ்டேஷன் மாஸ்டர் விசாகப்பட்டினத்தில் வசிக்கும் நிலையில், அவரது மனைவி சத்திஸ்கரின் துர்க் பகுதியில் வசிக்கிறார். அவர்கள் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடலின்போது,  ஸ்டேஷன் மாஸ்டர் சொன்ன ”ஒகே” என்ற ஒற்றை வார்த்தை தான் பெரும் பிரச்னைக்கு காரணமாகியுள்ளது.  

வேலையின் போது வெடித்த வாக்குவாதம்

இந்த தம்பதிக்கு கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது . அந்த பெண் தனது முன்னாள் காதலனுடன் திருமணத்திற்கு பிறகும் தொடர்பில் இருந்ததாகவும், இதனால் கணவருடன் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஸ்டேஷன் மாஸ்டர் பணியில் இருந்தபோது, மீண்டும் தனது மனைவியுடன் செல்போன் உரையாடலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி கடினமான வார்த்தைகளை கூறிக்கொள்ள, கோபமடைந்த ஸ்டேஷன் மாஸ்டர் ”எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு வந்து பேசிக்கொள்ளலாம், ஓகே?” என கூறிவிட்டு செல்போனை கட் செய்துள்ளார். 

ரயில்வேதுறைக்கு ரூ.3 கோடி நஷ்டம்

இதனிடையே, ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியுடன் பேசும்போது தனது மைக்ரோஃபோனை ஆன் செய்து வைத்துள்ளார். அப்போது, அவர் சொன்ன ”ஓகே” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் எதிர்தரப்பில் இருந்த சக பணியாளர் தவறாக புரிந்துகொண்டு, கட்டுப்படுத்தப்பட்ட பாதைக்குள் சரக்கு ரயிலை செலுத்தியுள்ளார். நல்வாய்ப்பாக அங்கு விபத்து எதுவும் ஏற்படாவிட்டாலும், நக்சல் நடமாட்டம் மிகுந்த பகுதிக்குள் விதிகளை மீறி இரவில் ரயில் செலுத்தப்பட்டதால், ரயில்வேதுறைக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இடைநீக்கமும், விவாகரத்தும்:

இதையடுத்து பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டதாக, அந்த ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என விசாகப்பட்டினம் குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால், தனது கணவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், மைத்துனருடன் கணவருக்கு தகாத உறவு இருப்பதாகவும் புகாரளித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தை நாடி, வழக்கை துர்க் குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றினார். அதில், ஸ்டேஷன் மாஸ்டரின் விவாகரத்து கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தை நாடினர். அதன் விசாரணையின் முடிவில், மனைவியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறி நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும், தொலைபேசியில் மனைவியின் தொடர்ச்சியான வாதங்கள், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகியவை "மனதளவில் கொடுமைப்படுத்தும்" செயல் என நீதிபதி சாடியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கேபிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
Embed widget