அமலாக்கத் துறையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரினார் சோனியா காந்தி
அமலாக்கத் துறையில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியுள்ளார் சோனியா காந்தி. இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமலாக்கத் துறையில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியுள்ளார் சோனியா காந்தி. இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், கொரோனா பெருந்தொற்று சிகிச்சையில் இருந்து திரும்பியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மருத்துவர்கள் வீட்டில் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். நுரையீரல் தொற்று காரணமாக அவரை வீட்டில் பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அவர் அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
வழக்கு:
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு கைப்பற்றியது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Since she has been strictly advised rest at home following her hospitalisation on account of Covid and lung infection, Congress President Smt. Sonia Gandhi has written to ED today seeking the postponement of her appearance there by a few weeks till she has recovered completely.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 22, 2022
ஆஜர்:
7 ஆண்டுகள் பழமையான வழக்கில் ஆஜராகுமாறு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ராகுல் காந்தி நாளையும், சோனியா காந்தி ஜூன் 8 ஆம் தேதியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிருவனத்தை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நிறுவனத்தின் யங் இந்தியா கைப்பற்றியதல் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதையடுத்து அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை அபகரித்து விட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வருமான வரித்துறை சோதனை:
அதையடுத்து புகார் தொடர்பாக யங் இந்தியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 2011-12 ஆம் ஆண்டில் வருமானம் குறைவாக காட்டப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது. அதை எதிர்த்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய, வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.