பிப்ரவரி மாதத்தின் வெப்பமான இரவு.. சிம்லாவில் 14.4 டிகிரியாக பதிவான வெப்பநிலை.. காரணம் என்ன?
இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் வெள்ளிக்கிழமை பிப்ரவரி மாதத்தின் வெப்பமான இரவு, குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 டிகிரியாக பதிவானது என உள்ளூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் வெள்ளிக்கிழமை பிப்ரவரி மாதத்தின் வெப்பமான இரவு, குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 டிகிரியாக இருந்தது. இது இயல்பை விட பதினொரு டிகிரி அதிகமாகும் என்று உள்ளூர் வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
Himachal Pradesh Weather Update: Shimla Sees February`s Warmest Night at 14.4 Degrees Celsius pic.twitter.com/v4BFdMyN0G
— Sunder Barange (@sunder_barange) February 19, 2023
முன்னதாக, 14.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கடந்த பிப்ரவரி 23, 2015 அன்று பதிவு செய்யப்பட்டது. அண்டை மாநிலங்களான ஹிமாச்சலின் முக்கிய நகரங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை சிம்லாவை விட குறைவாக இருந்தது. சண்டிகரில் குறைந்தபட்சமாக 11.8 டிகிரி செல்சியஸ், டேராடூனில் 11.1 டிகிரி செல்சியஸ், ஜம்முவில் 11.3 டிகிரி செல்சியஸ், பாட்டியாலாவில் 12.3 டிகிரி செல்சியஸ், அம்பாலாவில் 12.8 டிகிரி செல்சியஸ், ஜெய்ப்பூரில் 14.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சிம்லாவில் அதிகபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது, இது இயல்பை விட 11.4 டிகிரி அதிகமாகும். பாதரச குறியீடும் 30 டிகிரியை தாண்டியது, உனாவில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 30.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஹிமாச்சலில் உள்ள மற்ற நகரங்களிலும் வெப்பநிலை உயர்ந்துள்ளது - கல்பாவில் அதிகபட்ச வெப்பநிலை 17.6 டிகிரி செல்சியஸ் மற்றும் கீலாங்கில் 7.2 டிகிரி செல்சியஸ், குஃப்ரியின் முக்கிய சுற்றுலாத் தலங்களான நர்கண்டாவில் 17.1 டிகிரி செல்சியஸ், 17.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மணாலியில் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ், டல்ஹவுசி மற்றும் தர்மசாலாவில் முறையே 20.6 டிகிரி செல்சியஸ் மற்றும் 26.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பிப்ரவரி 21 வரை மத்திய மற்றும் உயரமான மலைகளில் ஒருசில இடங்களில் மழை மற்றும் பனி பெய்யும் என்று உள்ளூர் வானிலை மையம் கணித்துள்ளது. இது மட்டுமின்றி, தேசிய தலைநகர் டெல்லியும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை 29.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, இது பருவத்தின் சராசரியை விட 6 புள்ளிகள் அதிகம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் 12.8 டிகிரி செல்சியஸ் பதிவானது, இது இயல்பை விட இரண்டு புள்ளிகள் குறைவாக இருந்தது. ஈரப்பதம் 93 முதல் 45 சதவீதம் வரை இடுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வானிலை துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஃபதேபூர், சிகார் மற்றும் சுருவில் 5.4 டிகிரி செல்சியஸ் பதிவானது. சித்தோர்கரில் 5.9 டிகிரியாகவும், மற்ற இடங்களில் 8 டிகிரியாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜலோரில் 30.9 டிகிரியும், துங்கர்பூரில் 29.7 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தலைநகர் ஜெய்ப்பூரில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 26 டிகிரி மற்றும் 11 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.