PM Modi : பிரதமர் மோடிதான் ஜவ்வரிசி கிச்சடி செய்ய கற்றுக்கொடுத்தார்.. பாஜக பிரமுகர் மனைவி பகிர்ந்த சுவாரஸ்யம்..
”நவராத்திரி சமயத்தில் நான் மோடிக்கு கிச்சடி செய்து கொடுத்தேன். ஆனால் அது அவர் எதிர்ப்பார்த்த அளவுக்கு நன்றாக இல்லை. அதன் பிறகு கிச்சடி எப்படி செய்ய வேண்டும் என எனக்கு கற்றுக் கொடுத்தார்.”
பிரதமர் மோடி, நேற்று முன் தினம் (மே.31) இமாச்சலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவுக்கு வருகை தந்திருந்தார். தன் அரசியல் வாழ்வின் தொடக்கக் கட்டத்தில் இமாச்சலப் பிரதேச பாஜக பிரிவின் பொறுப்பாளராக மோடி இருந்துள்ளார்.
இது மோடி கிச்சடி!
இந்நிலையில், மோடி தனக்கு ’சாபுதானா கிச்சடி’ எனப்படும் ஜவ்வரிசி கிச்சடி செய்ய கற்றுக் கொடுத்த சுவாரஸ்யமான சம்பவத்தை பாஜக கவுன்சிலர் தீபக் சர்மாவின் மனைவி சீமா தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.
1997ஆம் ஆண்டு நவராத்திரி சமயத்தில் நான் மோடிக்கு கிச்சடி செய்து கொடுத்தேன். ஆனால் அது அவர் எதிர்ப்பார்த்த அளவுக்கு நன்றாக இல்லை. அதன் பிறகு கிச்சடி எப்படி செய்ய வேண்டும் என எனக்கு கற்றுக் கொடுத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
எளிய மக்களுடனான மோடியின் பிணைப்பு
முன்னதாக இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர், தன்னிடம் பிரதமர் மோடி தீபக் தாக்கூர் குறித்து கேட்டறிந்ததாக பேரணி ஒன்றில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
”தீபக் சர்மா கால்நடையாக தான் இன்னும் கோயிலுக்குச் செல்கிறாரா என மோடி என்னிடம் கேட்டார். சாதாரண பாஜக தொண்டர்களுடன் மோடி கொண்டுள்ள பிணைப்பை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்” எனவும் தாக்கூர் தன் உரையின்போது பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நினைவுகூர்ந்த பாஜக கவுன்சலர்
இந்நிலையில் மோடி தன்னைப் பற்றி கேட்டறிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் தீபக் சர்மா. “மோடி 1997-98 காலக்கட்டத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் பாஜக பொறுப்பாளராக இருந்தபோது, சிம்லா பஜாரில் உள்ள என் தீபக் வைஷ்ணவ் போஜ்னல்யா உணவகத்துக்கும், என் வீட்டுக்கும் அடிக்கடி வருவார்.
ஆண்டுக்கு இரண்டு முறை நவராத்திரியின் போது மோடி விரதம் இருப்பார். மார்ச் மாதத்தின் முதல் நவராத்திரியின் போது, மோடி தண்ணீரை மட்டுமே எடுத்துக் கொள்வார். தசராவுக்கு முந்தைய இரண்டாவது நவராத்திரியின் போது பழங்கள் போன்றவற்றை உட்கொள்வார்.
1997 ஆம் ஆண்டு இரண்டாவது நவராத்திரியின் போது 'சபு தனா கிச்சிடி' சாப்பிட மோடி விருப்பம் தெரிவித்தார். என் மனைவி சீமா ஷர்மா அவருக்கு சமைத்துக் கொடுத்தார். ஆனால் அது அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப ருசியாக இல்லை. தொடர்ந்து சீமாவிடம் பேசிய அவர் எவ்வாறு கிச்சடி செய்ய வேண்டும் எனக் கற்றுக் கொடுத்தார்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நினைவு கூர்ந்த தீபக்கின் சீமா, அன்று முதல் இன்று வரை பிரதமர் மோடி கற்.றுக் கொடுத்தபடி தான், தான் ஜவ்வரிசி கிச்சடி செய்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்