Sheikh Hasina : இலங்கையை போன்ற நெருக்கடியை ஒருபோதும் எங்கள் நாடு சந்திக்காது - பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா
பலரும் பங்களாதேஷூம் இலங்கையை போல பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என எச்சரித்து வருகின்றனர் ஆனால் நிச்சயம் அதுபோல நடக்காது,
இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு இருக்கும் பங்களாதேஷ் அதிபர் ஷேக் ஹசீனா, இந்தியா வருவதற்கு முன்பு ANI உடனான சந்திப்பின்போது பங்களாதேஷின் பொருளாதாரத்தை பற்றி தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். கோவிட் 19 மற்றும் உக்ரைன் ரஷ்யா மோதல்கள் இருந்த போதும் தமது நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவான நிலையில் இருப்பதாகவும்,தனது ஆட்சியின் போது தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் விடாமுயற்சியுடன் எதிர்கால திட்டமிடலுடன் தாங்கள் திட்டமிடுவதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
இலங்கையைப் போல பங்களாதேஷும் பொருளாதார வீச்சியை சந்திக்குமா என்ற கேள்விக்கு, எங்கள் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது.இருப்பினும் கோவிட் 19 நாங்கள் திறம்பட எதிர் கொண்டோம்.அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உதவியை எங்கள் நாடு ஒரு பொழுதும் மறக்காது என தெரிவித்துள்ளார். பங்களாதேஷுக்கு மட்டுமல்லாது தெற்காசியாவில் உள்ள சிறிய நாடுகள் அனைத்திற்குமே இந்தியா தடுப்பூசிகளை தந்து அரவணைத்ததை யாரும் மறக்க முடியாது. உலகளாவிய அளவில் மிகவும் மோசமான பொருளாதார மந்த நிலையை அனணத்து நாடுகளும் எதிர்கொண்டது போல, பங்களாதேஷும் எதிர்கொண்டது என ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா , உக்ரைன் , ரஷ்யா பிரச்சனை என பல மோசமான பிரச்சினைகள் இருந்தபோதிலும், பங்களாதேஷின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக இருந்து வருகின்றது என தெரிவித்துள்ளார். பலரும் பங்களாதேஷூம் இலங்கையை போல பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என எச்சரித்து வருகின்றனர் ஆனால் நிச்சயம் அதுபோல நடக்காது, இருப்பினும் தங்களின் சரியான கடன் பற்றிய புரிதல்களாலும், கொள்கைகளாலும், சிறப்பாக சூழ்நிலைகளை கையாண்டதாக கூறியுள்ள ஷேக் ஹசீனா பங்களாதேஷ் ஒரு போதும் இலங்கையைப் போல மோசமான பொருளாதார பின்னடைவிற்கு செல்லாது என கூறியுள்ளார்.
ஆய்வாளர்கள் பலரும் இலங்கையின் வீழ்ச்சிக்கு சீனாவின் கடன் தான் காரணம் என நினைக்கிறார்கள், இது கடன் பொறிகளாகவே பார்க்கப்படுகிறது, இருந்த போதிலும் நாடு அதனை நிர்வகிக்கும் விதத்தில் தான் இருக்கிறது என ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் தனது கடன்களுக்காக ஆகச்சிறந்த பொருளாதாரக் கொள்கைகளை கொண்டுள்ளது.இதனால் நாட்டின் கடன் விகிதத்தை கருத்தில் கொண்டு சரியான திட்டங்களை முன்னெடுக்கிறோம்.இதன்படி கடன் வாங்கி ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது திட்ட முடிவில் பங்களாதேஷின் லாபம் எப்படி இருக்கும் என்பதை கணக்கில் கொண்டு,பங்களாதேஷிற்கான கடன் வாங்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்திருக்கிறார். ஒருவேளை வாங்கும் கடனிற்கான திட்டத்தில் பங்களாதேஷுக்கான பயன்கள் எதுவும் இல்லை என்று தெரிந்தால், அப்படிப்பட்ட திட்டத்திற்கான கடன்களை வாங்குவதை, பங்களாதேஷ் ஒருபோதும் விரும்புவதில்லை என்றும், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் கூறியுள்ளார்.
தமது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை மட்டுமே முன்னெடுப்பதாகவும், அதேபோல எந்த திட்டத்தினையும் தொடங்க முன்பு, தமது நாட்டு மக்களுக்கு பயனுள்ளதா என யோசித்தே முடிவு எடுப்பதாகவும் , ஆகவே தேவையில்லாத எந்த திட்டத்தினையும், தற்போதைக்கு கையில் எடுக்கவில்லை எனவும் வீணாக எந்த பணத்தையும் செலவிடவில்லை எனக் கூறியுள்ள அவர், தங்களிடம் வலுவான பொருளாதாரக் கொள்கைகளும், கடன் வாங்குவதில் சிறப்பான திட்டமிடுதல்களும் இருப்பதினால், பங்களாதேஷ் அனைத்து கடன்களையும் சரியான நேரத்தில் செலுத்தி வருகிறது என ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.
இதைப் போலவே அந்நிய செலாவணி கையிருப்பு விஷயத்திலும்,பங்களாதேஷின் நிதி கொள்கைகளின் காரணமாக, திறம்பட செயல்பட்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.