மேலும் அறிய

காட்டுப்பாதையில் ஸ்கூட்டியுடன் மோதிய பெண்.. உடைந்த தந்தம்.. தெறித்து ஓடிய யானை

திடீரென சாலையில் குறுக்கே யானை ஒன்று ஓடியுள்ளது. நிகிதா சுதாரிப்பதற்குள் அவரது இரு சக்கர வாகனம் யானையின் மீது மோதியுள்ளது.  இதில் தவறி விழுந்த நிகிதா யானை கண்டதும் அலறிக்கொண்டே அங்கிருந்து ஓடியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது யானை மோதிய நிலையில் அதன் தந்தம் உடைந்தது. இந்த சம்பவத்தில் வாகன ஓட்டி காயமடைந்தார். இதுதொடர்பாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

இந்த சம்பவம் உத்தரகாண்டின் காதிமா பகுதியில் நடந்துள்ளது. காயமடைந்த யானையை தேடும் பணி நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பெண் கதிமாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அவரது பெயர் நிகிதா கப்ரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். 

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த நாளில் காலை 7 மணியளவில் நிகிதா கப்ரி  தனது ஸ்கூட்டியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் பாதை பன்பாசா மற்றும் சாகர்பூருக்கு இடையேயான அடர்ந்த வனப்பகுதியாகும். இப்படியான நிலையில் திடீரென சாலையில் குறுக்கே யானை ஒன்று ஓடியுள்ளது. நிகிதா சுதாரிப்பதற்குள் அவரது இரு சக்கர வாகனம் யானையின் மீது மோதியுள்ளது.  இதில் தவறி விழுந்த நிகிதா யானை கண்டதும் அலறிக்கொண்டே அங்கிருந்து ஓடியுள்ளார். பின் சிறிது தூரத்தில் அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். 

இதற்கிடையில் இரு சக்கர வாகனம் மோதியதால் கடும் கோபமடைந்த அந்த யானை அதனை சேதப்படுத்த முயன்று கடுமையாக தாக்கியுள்ளது. ஆனால் யானையின் தந்தம் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டியின் முன்பக்கத்தில் சிக்கியது. அதனை வெளியே எடுக்க முயன்ற நிலையில் தந்தத்தின் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதன் இரண்டு துண்டுகள் சாலையில் கிடந்தது. 

யானை ஸ்கூட்டரை இரண்டு மூன்று முறை பலமாகத் தாக்கிய நிலையில் அதன் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது. தும்பிக்கை உடைந்ததும் பயந்துபோன யானை மீண்டும் காட்டுக்குள் ஓடியுள்ளது. இதற்கிடையில் நிகிதா மயங்கி கிடந்ததைக் கண்டு அப்பகுதி வழியாக வந்த சக ஆசிரியர்கள் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாகர்பூர் காவல் நிலையத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு  வந்த வனத்துறையினர் யானையின் தந்தத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளைக் கண்காணிப்பதற்காக சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இரண்டு மறைவு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இரவும் பகலும் பயணிக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் கவனமாக செல்ல வேண்டும் என வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget