மேலும் அறிய

Schools Reopening : ஹரியானா, குஜராத் மாநிலங்களில் மீண்டும் திறக்கப்படுகின்றன பள்ளிகள்..!

கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த காரணத்தால் ஹரியானா மற்றும் குஜராத்தில் அடுத்த வாரம் முதல் பள்ளிகளை திறக்கப்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக முதல் அலையில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டது. ஊரடங்கு, கடைகள் திறப்பிற்கு கட்டுப்பாடுகள், மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டு போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டாலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், ஹரியானா மாநில அரசு ஜூலை 16-ந் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் எழுத்துப்பூர்வமான அனுமதி கட்டாயம் தேவை என்றும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

Schools Reopening : ஹரியானா, குஜராத் மாநிலங்களில் மீண்டும் திறக்கப்படுகின்றன பள்ளிகள்..!

மேலும்,6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 23-ந் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளும், பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகளை பின்னர் தொடங்கிக்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பள்ளிகளில் நேரில் வந்து பாடம் பயில தயங்கும் மாணவர்களுக்காக இணையதள வகுப்புகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அதில் வகுப்புகளை தொடர விரும்பும் மாணவர்கள் தங்களது வகுப்புகளை தொடரலாம் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Schools Reopening : ஹரியானா, குஜராத் மாநிலங்களில் மீண்டும் திறக்கப்படுகின்றன பள்ளிகள்..!

ஹரியானா அரசைப் போலவே, குஜராத் மாநில அரசும் வரும் 15-ந் தேதி முதல் மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களை திறக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாநில அரசு நேற்று வெளியிட்டது. குஜராத் மாநிலத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு வரத்தயங்கும் மாணவர்களின் நலன் கருதி இணையவழி வகுப்புகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், மாணவர்களுக்கான வருகைப்பதிவேடு தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி கூறியுள்ளார். குஜராத்தில் 50 சதவீத வருகையுடன் கல்லூரிகளில் விழாக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மாணவர்கள் தாங்களாக விருப்பப்பட்டால் கல்லூரிகளுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்திலும் நாளை மறுநாள் முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.  

தமிழ்நாட்டில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget