Diwali 2022 : தீபாவளி கொண்டாட உதவுங்கள்..! நீங்களும் வீட்டிற்கு வாங்க! - முதல்வருக்கு சிறுவன் எழுதிய கடிதம் வைரல்!
மகாராஷ்ட்ராவில் தீபாவளி பண்டிகையை கொண்டாட உதவுமாறு அந்த மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு சிறுவன் ஒருவன் எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.
தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டைப் போலவே வட இந்தியாவிலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர்.
மகாராஷ்ட்ராவில் தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை உடுத்தி, வீடுகள்தோறும் அகல்விளக்குகள் ஏற்றி, பூரான் போளி எனப்படும் பலகாரம் செய்து கொண்டாடுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தீபாவளி கொண்டாட நிதி உதவி செய்யுமாறு அந்த மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு சிறுவன் ஒருவன் எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.
அந்த சிறுவன் எழுதிய கடிதத்தில், பொருளாதார ரீதியாக நாங்கள் நலுவடைந்து இருப்பதால் எனது தாயாரால் தீபாவளி பண்டிகைக்கு பூரான் போளி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், எனது அம்மா தீபாவளி பண்டிகைக்கு பூரான் போளி செய்ய நிதி உதவி செய்ய வேண்டும். மேலும், தீபாவளி பண்டிகைக்கு எனது வீட்டிற்கு வர வேண்டும் என்றும் அந்த சிறுவன் கடிதம் எழுதியுள்ளான்.
மராத்திய மொழியில் அந்த சிறுவன் எழுதிய இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடக்கப்பள்ளி பயிலும் அந்த சிறுவன் எழுதிய இந்த கடிதத்தை கண்டு பலரும் அவனது குடும்பத்திற்கு உதவி செய்து வருகின்றனர். மேலும், சிறுவனின் நெகிழ்ச்சியான கடிதத்தை மேற்கோள் காட்டி பலரும் சிறுவனின் வீட்டிற்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே செல்ல வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டை ஒருநாள் தீபாவளி கொண்டாடப்படும். ஆனால், வட இந்தியாவில் ஒருநாளாக மட்டுமின்றி 5 நாளாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். தந்ரேஸ் எனப்படம் முதல் நாளில் வீட்டிற்கு புதிய உலோகங்கள் வாங்குவார்கள். இதில் அவரவர் வசதிக்கேற்ப தங்கமோ, எவர்சில்வர் பாத்திரேமா வாங்குவார்கள்.
இரண்டாவது நாள் தீபாவளி சோட்டா தீபாவளி என்றும், மூன்றாவது நாள் தீபாவளியும், நான்காவது நாள் கோவர்தன் பூஜையும், 5வது நாள் பைய்யா தோஜ் என்ற கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Chief Justice Of India : இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி ஆகிறார் டி.ஒய். சந்திரசூட்..? யார் இவர்?
மேலும் படிக்க : யாரெல்லாம் வாடகைத்தாய் முறைமூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்? : மருத்துவர்கள் பதில்