Sabarimala Temple Opening: சாமியே சரணம் ஐயப்பா.. சபரிமலையில் 12-ஆம் தேதி நடைதிறப்பு.. முழு விவரம் இதோ..
Sabarimala: சபரிமலையில் வரும் 12-ந் தேதி மாசி மாத சிறப்பு பூஜைகளுக்காக ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படுகிறது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த 14-ந் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
12-ந் தேதி நடைதிறப்பு
பின்னர், சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் 20-ந் தேதி நடை சாத்தப்பட்டது, இந்த நிலையில், மாசி மாதத்தில் சிறப்பு பூஜைகளுக்காக ஐயப்பன் ஆலயம் வரும் 12-ந் தேதி( வரும் ஞாயிற்றுக்கிழமை) ஐயப்பன் கோவில் மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, ஐயப்பனை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீண்டும் சபரிமலைக்கு வர உள்ளனர்.
12-ந் தேதி சபரிமலை கோயிலில் மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் ஜெயராமன் நம்பூதிரி நடையை திறக்க உள்ளார். பின்னர், அன்றிலிருந்து 5 நாட்களுக்கு அதாவது 17-ந் தேதி வரை சிறப்பு பூஜைகளும், பக்தர்கள் வழிபாட்டிற்கும் அனுமதிக்கப்பட உள்ளது.
சிறப்பு பூஜைகள்:
தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். சபரிமலையில் வரும் 12-ந் தேதி நடைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்து மதத்தில் மாசி மாதமானது மிகவும் பிரசித்தி பெற்ற மாதம் என்பதாலும், மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்கள் மிகவும் முக்கியமானது என்பதால் அந்த நாட்களில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
பக்தர்கள்:
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக கார்த்திகை மாதங்களில் மாலை அணிந்து, இந்தியாவில் உள்ள ஏராளமான மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சபரிமலைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் விரதமிருந்து வருகின்றனர். சபரிமலை மூலமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி வருவாயும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மகரஜோதி தரிசனம், மண்டல விளக்கு பூஜையின்போது சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.
சபரிமலையில் வரும் 12-ந் தேதி மீண்டும் நடை திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் உள்பட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Kerala Trans Couple : நாட்டிலேயே முதல் முறையாக கேரள திருநர் தம்பதிக்கு குழந்தை பிறந்தது...இணையத்தில் குவியும் வாழ்த்து...
மேலும் படிக்க: PM Modi In Rajya Sabha : ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? திமுகவை விமர்சித்த பிரதமர் மோடி..!