மேலும் அறிய

சபரிமலை தங்கக் கவச மோசடி: முன்னாள் அதிகாரி கைது! 4 கிலோ தங்கம் மாயமான மர்மம்!

சபரிமலை தங்கக் கவச மோசடி வழங்கு தொடா்பாக முன்னாள் சபரிமலை செயல் அதிகாரி சுதீஷ் குமாா் கைது செய்யப்பட்டாா்.

கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில்  சன்னிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிலைகளின் கவசங்களுக்குத் தங்க முலாம் பூசும் செலவை பெங்களூரைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவா் ஏற்றுக்கொண்டாா். பின்னா், அந்தப் பணிகளுக்காக கவசங்களை அவா் சென்னைக்கு கொண்டு வந்தாா். இந்நிலையில், அந்தக் கவசங்களில் சுமாா் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சா்ச்சை ஏற்பட்டது. இதுமட்டுமின்றி துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பீடங்கள் காணாமல் போனதாக உண்ணிகிருஷ்ணன் தெரிவித்த நிலையில், அவை அவரின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டன.


சபரிமலை தங்கக் கவச மோசடி: முன்னாள் அதிகாரி கைது! 4 கிலோ தங்கம் மாயமான மர்மம்!

மாநிலத்தையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து உண்ணிகிருஷ்ணன் போற்றி கைது செய்யப்பட்டாா். இந்த முறைகேடு தொடா்பாக ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில், சென்னை, கா்நாடக மாநிலம் பெங்களூரு, பல்லாரி ஆகிய இடங்களுக்கு உண்ணிகிருஷ்ணன் போற்றியை கேரள காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு அழைத்துச் சென்றது. அப்போது பெங்களூரில் உள்ள அவரின் இல்லம், சென்னையில் தங்கக் கவசங்களை செப்பனிட்டு புதிதாக தங்க முலாம் பூசும் பணியை ஏற்ற நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. ஆதாரங்களை திரட்டும் பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அந்தக் குழு உண்ணிகிருஷ்ணன் போற்றியை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கேரளம் அழைத்துச் சென்றது.


சபரிமலை தங்கக் கவச மோசடி: முன்னாள் அதிகாரி கைது! 4 கிலோ தங்கம் மாயமான மர்மம்!

இதுமட்டுமின்றி விசாரணையில் துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பீடங்கள் காணாமல் போனதாக உண்ணிகிருஷ்ணன் தெரிவித்த நிலையில், அவை அவரின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா், சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமாரிடம் விசாரணை நடத்தினா். திருவனந்தபுரத்தில் உள்ள காவல் துறை குற்றப் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையைத் தொடா்ந்து, அவா் கைது செய்யப்பட்டாா்.இந்த நடவடிக்கை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சபரிமலை செயல் அதிகாரியாக சுதீஷ் குமாா் இருந்தபோது துவாரபாலகா் சிலைகளின் கவசங்களை செப்பனிட்டு புதிதாக தங்க முலாம் பூசும் பணிக்காக உண்ணிகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவற்றைச் செப்பு கவசங்கள் என்று முறைகேடாக சுதீஷ் குமாா் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளாா்.


சபரிமலை தங்கக் கவச மோசடி: முன்னாள் அதிகாரி கைது! 4 கிலோ தங்கம் மாயமான மர்மம்!

இது அந்தச் சிலைகளில் இருந்து தங்க முலாமை அகற்றி உண்ணிகிருஷ்ணன் மோசடியில் ஈடுபட வழிவகுத்தது. அந்தக் கவசங்களை தங்க முலாம் பூசும் பணிக்காக உண்ணிகிருஷ்ணனிடம் ஒப்படைக்குமாறு திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்திடம் சுதீஷ்குமாா்தான் பரிந்துரைத்துள்ளாா். மேலும் நடைமுறைக்கு மாறாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் திருவாபரணம் ஆணையா் இல்லாமல், சிலைகளில் இருந்து அந்தக் கவசங்கள் எடுக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது என்கின்றனர். ஏற்கெனவே இந்த மோசடி தொடா்பாக உண்ணிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு ஆகியோா் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக சுதீஷ்குமாா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பத்தனம்திட்டாவில் உள்ள குற்றவியல் நீதித்துறை  நீதிமன்றம் உத்தரவிட்டது.

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget