மேலும் அறிய

சபரிமலை: தங்கக் கவசங்கள் மாயமான வழக்கில் முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் குற்றவாளியாக சேர்ப்பு! பரபரப்பு விசாரணை!

தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான 2வது வழக்கிலும், திருவிதாங்கூா் தேவசம் போர்டின் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்கப்பட்டுள்ளாா்.

சபரிமலை கோயிலில் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான 2வது வழக்கிலும், திருவிதாங்கூா் தேவசம் போர்டின் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்கப்பட்டுள்ளாா்.

சபரிமலை: தங்கக் கவசங்கள் மாயமான வழக்கில் முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் குற்றவாளியாக சேர்ப்பு! பரபரப்பு விசாரணை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள சபரிமலை உள்ள ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றக் கோயில். இந்த கோயிலின் ஐயப்பன் சன்னதிக்கு முன்பு துவாரபாலகர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு மேல் சுமார் 42 கிலோ எடை உடைய தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவாரபாலகர் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க தகடுகள் மீது தங்க முலாம் பூசுவதற்காக சபரிமலை நன்கொடையாளராக இருந்த உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் மூலம் சென்னையில் உள்ள SMAR CREATION நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. பணிகள் முடிந்து மீண்டும் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டபோது 38 கிலோ தங்கம் குறைந்து துவார பாலகர் சிலை தங்க தகடுகள் 4.52 கிலோ மட்டுமே இருந்துள்ளது.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையின் அறிக்கையை 6 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், தங்கம் மாயமானது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, SID அதிகாரிகள் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சபரிமலை கருவறையின் இருபுறமும் உள்ள துவாரபாலகன் சிலைகள் தங்க முலாம் பூசப்படவில்லை.

சபரிமலை: தங்கக் கவசங்கள் மாயமான வழக்கில் முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் குற்றவாளியாக சேர்ப்பு! பரபரப்பு விசாரணை!

அவை செப்பு தகடுகள். ஆனால்,சபரிமலை கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகன் சிலைகள் பீடங்கள் தங்கமுலாம் பூசப்பட்டவை என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தங்க தகடுகள் பதிக்கப்பட்டவை என்பதை உறுதி செய்யும் ஆவணங்களை திருவதாங்கூர் தேவசம் போர்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உன்னிகிருஷ்ணன், முராரி பாபு, முன்னாள் தேவசம்போர்டு செயலர் ஜெயஸ்ரீ, உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், கோயில் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான முதல் வழக்கில், திருவிதாங்கூா் தேவசம் போர்டு முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் கடந்த மாதம் கைது செய்யப்பட்டாா். இப்போது புதிய ஆதாரங்களின் அடிப்படையில், துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான இரண்டாவது வழக்கிலும் பத்மகுமாா் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கு தொடா்பாக பத்மகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க, கொல்லம் சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்ஐடி விரைவில் மனு தாக்கல் செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதனிடையே வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பத்மகுமாரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

சபரிமலை: தங்கக் கவசங்கள் மாயமான வழக்கில் முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் குற்றவாளியாக சேர்ப்பு! பரபரப்பு விசாரணை!

2 வழக்குகளின் விசாரணையை முடிக்க எஸ்ஐடி-க்கு கேரள உயா்நீதிமன்றம் கூடுதலாக 6 வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இதுவரை எஸ்ஐடி-இன் விசாரணை திருப்தி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட தேவசம் முன்னாள் நிா்வாக அதிகாரி எஸ். ஸ்ரீகுமாரின் முன்ஜாமீன் மனுவை கேரள உயா்நீதிமன்றம் நிராகரித்தது.இந்த 2 வழக்குகள் தொடா்பாக, முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உண்ணிகிருஷ்ணன் போற்றி, தேவஸ்வம் முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா் உள்பட 6 பேரை எஸ்ஐடி இதுவரை கைது செய்துள்ளது.

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Embed widget