மேலும் அறிய

சபரிமலை விமான நிலைய திட்டம்: நீதிமன்றம் அதிரடி தடை! நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடங்குமா?

பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு சபரிமலையில் கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருக்கிறது.

சபரிமலை பசுமை விமான நிலையத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு கேரள உயா்நீதிமன்றம் தடை விதித்தது. திட்டத்துக்கு தேவைப்படும் குறைந்தபட்ச நில அளவை மதிப்பீடு செய்ய மாநில அரசு தவறிவிட்டதாக கூறி உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

சபரிமலை விமான நிலைய திட்டம்: நீதிமன்றம் அதிரடி தடை! நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடங்குமா?

கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஐயப்பனை காண தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வருடம் தோறும் பக்தர்கள் சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொள்கின்றனர். தற்போது பம்பை, எரிமேலி வழியாக சபரிமலைக்கு செல்லலாம். கேரளாவுக்கு சென்றதும் அங்கிருந்து சாலை மார்க்கமாக வனப் பகுதிகளுக்கு நடுவே சாலை வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு சபரிமலையில் கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருக்கிறது. இதற்காக பல இடங்களில் நிலம் பார்க்கப்பட்டு தற்போது எரிமேலியில் சுமார் 2400 ஏக்கர் பரப்பளவில் கிரீன் பீல்ட் சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை கேரள அரசு தயார் செய்து மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு ஏற்கனவே அனுப்பி உள்ளது. 

குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள செறுவள்ளி எஸ்டேட் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க 2,570 ஏக்கா் நிலமும் அதற்கு வெளிப்புறத்தில் 307 ஏக்கா் நிலமும் கையகப்படுத்த 2022, டிசம்பர் 30-ஆம் தேதி கேரள அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிா்த்து அயானா அறக்கட்டளை சாா்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் சமூக தாக்க மதிப்பீடு (எஸ்ஐஏ) அறிக்கை, நிபுணா் குழு பரிந்துரை, மாநில அரசு உத்தரவு மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமன இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமை சட்டம், 2013 என இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதில் அதிகார துஷ்பிரயோகம் நடந்திருப்பதாகவும் மனுதாரா்கள் குறிப்பிட்டனா். இந்த மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சி.ஜெயசந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

சபரிமலை விமான நிலைய திட்டம்: நீதிமன்றம் அதிரடி தடை! நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடங்குமா?
அதில் கூறப்பட்டிருப்பதாவது, சபரிமலையில் புதிய விமான நிலையம் திட்டத்துக்குத் தேவையான நிலத்தை மதிப்பீட செய்ய அதிகாரிகள் தவறிவிட்டனா். இதனால் எஸ்ஐஏ அறிக்கை, நிபுணா் குழு பரிந்துரை மற்றும் மாநில அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமன இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உரிமை சட்டம், 2013 -இன்கீழ் இத்திட்டத்தை செயல்படுத்த மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சரியாக இல்லை. எனவே, நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகளை மீண்டும் முதலில் இருந்து மாநில அரசு தொடங்க வேண்டும். விமான நிலையங்கள் கட்டமைப்பு போன்ற சிக்கலான திட்டங்களை முறையாக அமல்படுத்த எஸ்ஐஏ குழுவில் தொழில்நுட்ப நிபுணா்களையும் மாநில அரசு இணைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Embed widget