வேகமாக வந்த ரயில்...நொடிப்பொழுதில் மூதாட்டியை காப்பாற்றிய ரயில்வே போலீசார்.. திக் திக் நொடிகள்!
பல நேரங்களில் இப்படியான ஆபத்தான செயல்களில் ஈடுபட நினைத்து சிக்கலில் மாட்டிக்கொள்பவர்களை கண நேரத்தில் ரயில்வே போலீசார் காப்பாற்றுவது சமீப காலமாக அதிகளவில் நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் ரயில் தண்டாவளத்தை ஆபத்தான முறையில் கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர்நொடிப்பொழுதில் ரயில்வே போலீசாரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் இணையத்தில் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஓடும் ரயிலில் ஏறுவதும், இறங்குவதும், ரயில் வரும் போது ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடப்பது குற்றம் என தெரிவிக்கப்பட்டாலும் நம்மில் பலரும் நேரத்தை மிச்சப்படுத்துகிறோம், கெத்து காட்டுகிறோம் என்கிற பெயரில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட நினைப்போம். இதனை தடுப்பதற்கும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ரயில்வே போலீசார் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ரயில்கள் வந்து செல்லும் வரை கண்காணிப்பது வழக்கம்.
ஆனாலும் பல நேரங்களில் இப்படியான ஆபத்தான செயல்களில் ஈடுபட நினைத்து சிக்கலில் மாட்டிக்கொள்பவர்களை கண நேரத்தில் ரயில்வே போலீசார் காப்பாற்றுவது சமீப காலமாக அதிகளவில் நடைபெற்று வருகிறது. என்னதான் இத்தகைய சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
आरपीएफ कर्मी की सतर्कता और तत्परता से बचाई गई महिला की जान!
— Ministry of Railways (@RailMinIndia) June 18, 2022
झांसी मंडल के ललितपुर स्टेशन पर पटरी पार कर रही एक बुजुर्ग महिला को वहां तैनात रेलवे सुरक्षाकर्मी ने अपनी जान पर खेलकर बचाया।
सभी से अनुरोध है कि एक से दूसरे प्लेटफॉर्म पर जाने के लिए फुट ओवर ब्रिज का उपयोग करें। pic.twitter.com/HZUCEXvbjs
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் ரயில் தண்டாவளத்தை ஆபத்தான முறையில் கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர்நொடிப்பொழுதில் ரயில்வே போலீசாரால் காப்பாற்றப்பட்டுள்ளார். நேற்றைய தினம் உத்தரபிரதேசத்தின் லலித்பூர் ரயில் நிலையத்திற்குள் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது ரயில்வே போலீஸ் துறையின் தலைமை காவலர் கமலேஷ் குமார் துபே ரயில் பாதையைக் கடக்க நினைக்கும் வயதான மூதாட்டியை தடுக்க முயற்சிக்கிறார். ஆனாலும் தண்டவாளத்தை கடந்து ரயிலில் அடிபட இருந்த நிலையில் அந்த மூதாட்டியை கமலேஷ் குமார் துபே காப்பாற்றினார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சகம், சம்பந்தப்பட்ட காவலரை பாராட்டியுள்ளதோடு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பயணிகள் நடை மேம்பாலத்தை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்