Flu and Corona : அச்சுறுத்தும் இன்ஃப்ளூயன்சா - கொரோனா.. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? எப்படி காத்துக்கொள்வது..?
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மற்றும் கொரோனா இரண்டு வைரஸிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? சிகிச்சை முறை என்ன என்பதை குறித்து மருத்துவர்கள் கூறும் கருத்துக்களை விரிவாக பார்க்கலாம்.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸின் தாக்கமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டு வைரஸ்களும் நுரையீரலை பாதிக்கிறது, இரண்டிற்கும் அறிகுறிகள் ஒரே மாதிரியாக தன் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அல்லது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு என்பதை வித்தியாசப்படுத்தும் வகையில் மருத்துவர்கள் சில வேறுபாடுகளை கூறியுள்ளனர்.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. A மற்றும் B ஆகும். டைப் A என்பது h1n1 மற்றும் h3n2 வைரஸாகும். தற்போது இந்தியாவில் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் டைப் A வகையாகும். இன்ஃப்ளூயன்ஸா விக்டோரியா மற்றும் யமகட்டா என்ற இரண்டு குடும்பங்களை சேர்ந்தது ஆகும். இந்தியாவில் காணப்படும் இன்ஃப்ளூயன்ஸா B இன் திரிபு விக்டோரியா குடும்பத்தை சேர்ந்தது ஆகும், அதே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா A இல், H3N2 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) படி, H1N1 பரவி வந்தாலும் குறைந்த எண்ணிக்கையில்தான் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் உள்ள டாடா மெடிக்கல் அண்ட் டயக்னாஸ்டிக்ஸ், வைராலஜிஸ்ட் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்தலைவர் டாக்டர் வி ரவியின் கூற்றுப்படி, கோவிட் நோயை விட எச் 3 என் 2 இல் அறிகுறிகள் மிகவும் கடுமையானவை, ஏனெனில் பெரும்பாலான மக்கள் கொரோனா வைரஸிற்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுள்ளனர் என குறிப்பிட்டார். மேலும் எச்3என்2 வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 101 முதல் 102 டிகிரி வரை காய்ச்சல் இருக்கும், சிலருக்கு கடுமையான் இருமல் மற்றும் வறண்ட தொண்டை, மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் தென்படும் என கூறியுள்ளார். இந்த காய்ச்சல் 4-5 தினங்களுக்கு இருக்கும் என்றும் இருமல் சுமார் 15 நாட்கள் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வைரஸ் மூச்சுகுழாயில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது, ஆனால் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பருவ நிலை மாற்றத்தின் போது மட்டும் ஏற்படும் தொற்று மேலும் இது மனிதர்களிடையே கொரோனா வைரஸ் போன்று வேகமாக பரவாது என கூறியுள்ளனர்.
"நோய்களின் தீவிரம், ஏறக்குறைய சமமாக உள்ளது. எச்3என்2, நிமோனியா போன்ற கடுமையான நோய்தொற்றாக மாறலாம். அரிதான சந்தர்ப்பங்களில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்" என டாக்டர் சின்னதுரை, கிரிட்டிகல் கேர், ஆஸ்டர் ஆர்வி மருத்துவமனை, பெங்களூரு தலைமை ஆலோசகர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்னரே இந்த வைரஸ் தொற்று இருந்து வந்துள்ளது. உதாரணத்திற்கு இரண்டு நபர்கள் பேசிக்கொண்டிருந்தால் கொரோனா தொற்று உடனடியாக பரவும் தன்மை கொண்டது. ஆனால் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவாது என கூறியுள்ளார். இந்த இரண்டு வைரஸ்களும் இருமல் மூலம் பரவுகிறது முக்கியமாக அலுவலகங்கள், ஏ.சி அறைகளில் வேகமாக பரவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறிகுறிகள் ஒன்றாக இருந்தாலும் சிகிச்சை முறை என்பது மாறுபட்டது தான். H3n2 வைரஸிற்கு காய்ச்சலுக்கான சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்றுக்கு அதற்கான சிறப்பு சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது. "அனைத்து சுவாச நோய் தொடர்பான வைரஸ்களையும் பரிசோதிக்கும் ஒரு மேம்பட்ட PCR சோதனை உள்ளது. இந்த சோதனை, கோவிட், இன்ஃப்ளூயன்சா மட்டுமல்லாமல் அடினோ வைரஸ் மற்றும்மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HPV) போன்ற பிற வைரஸ்களையும் கண்டறிய உதவுகிறது. இந்த மேம்பட்ட PCR சோதனை, ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை இருக்கும் என கூறுகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )