மேலும் அறிய

Covid-19 Spike in India: மத நிகழ்ச்சிகளும் தேர்தலும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம்; உலக சுகாதார மையம்

பிப்ரவரி மாதம் கும்பமேளா நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. அங்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதேபோல கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளும் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உலக சுகாதார மையம் அதையும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேலாக பதிவாகி வருகிறது. அத்துடன் பல மாநிலங்களில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவும் நோயாளிகள் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முனைப்பு  காட்டி வருகின்றனர். 

 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் மிகவும் வேகமானதற்கான காரணம் தொடர்பாக உலக சுகாதார மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, "தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பி.1.617 என்ற வகையில் உருமாரிய ஒன்று. இது மிகவும் பயங்கரமாக பரவும் தன்மையை கொண்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. 


Covid-19 Spike in India: மத நிகழ்ச்சிகளும் தேர்தலும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம்; உலக சுகாதார மையம்

மேலும் வைரஸ் தன்மையை போல் இந்தியாவில் கொரோனா பரவல் இந்த அளவிற்கு அதிகரிக்க வேறும் சில காரணங்கள் உண்டு. அதாவது இந்தியாவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பிரச்சார கூட்டங்கள் மிகவும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தக் கூட்டங்களில் அதிகளவில் மக்கள் கூடியதால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. இவற்றுடன் சேர்ந்து வைரஸ் பரவும் தன்மையையும் அதிகமாக இருந்ததால் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. 

இந்தியாவில் பரவி வரும் பி.1.617 உருமாறிய கொரோனா இந்தியா தவிர பிரிட்டனில் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொடர்பான முழுமையான ஆய்வு இன்னும் நடத்தப்படவில்லை. எனினும் இந்தியாவில் இருக்கும் நிலைமையை வைத்து பார்க்கும் போது இதன் பரவல் தன்மை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Covid-19 Spike in India: மத நிகழ்ச்சிகளும் தேர்தலும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம்; உலக சுகாதார மையம்

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கும்பமேளா நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. அங்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதேபோல கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளும் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உலக சுகாதார மையம் அதையும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!
ஆய்வுக்கு வந்த கல்வி அமைச்சர்.. வாடகைக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்.. வெடித்த சர்ச்சை!
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Embed widget