RBI on 1000 Rs Note: 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகமா..? ரிசர்வ் வங்கி ஆளுநர் பதில்..!
ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
1000 ரூபாய் நோட்டு மீண்டும் அறிமுகமா..?
2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்கும் வகையில் 1,000 ரூபாய்நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார் .
ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு அது யூகம் என்றும், அப்படிப்பட்ட திட்டம் எதுவும் தற்போது இல்லை," என்றும் அவர் கூறினார் .
2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ்:
2,000 ரூபாய் நோட்டு நவம்பர் 2016 -இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதாரத்தின் பணத் தேவையை "விரைவான முறையில்" பூர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் ஒரே இரவில் 10 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்து அழிக்கப்பட்டது.
2000 மட்டும் அல்லாமல் மற்ற ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தது உள்ளிட்ட காரணங்களால், 2018-19ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அவசரம் வேண்டாம்:
இந்த முடிவிற்குப் பிறகு முதன்முறையாக செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த் தாஸ், யாரும் தங்கள் 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறவோ அல்லது மாற்றவோ அவசரப்பட வேண்டாம் என்றும் கூறினார். ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நான்கு மாதங்கள் உள்ளன,எனவே மக்கள் இப்போது வங்கிகளுக்கு விரைந்து சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த காரணமும் இல்லை என்றார்.
தற்போது புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 10. 8 சதவீதம் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகள் எனவே இதை திரும்ப பெறுவது பொருளாதரத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2,000 ரூபாய் நோட்டுகளில் எண்பத்தொன்பது சதவீதம் மார்ச் 2017 -க்கு முன் வெளியிடப்பட்டது. மேலும் அவை நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை மதிப்பிடப்பட்ட ஆயுட்காலத்தின் முடிவில் உள்ளன என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க
Sarath Babu : சினிமா முதல் சீரியல் வரை.. சரத் பாபு கடந்து வந்த பாதை!
Sarath Babu Death: நடிகர் சரத் பாபுவின் உடல் அடக்கம் எங்கே? எப்போது? முழு விவரம் உள்ளே..!