Rajnath singh : "இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது” - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கேரள மாநிலம் சிவகிரி மடத்தில் நடைபெற்ற தீர்த்ததான மகோத்சவ் நிகழ்ச்சியில் துறவிகள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் மத்தியில் அவர் இன்று உரையாற்றினார். "அரசின் தற்சார்பு இந்தியா கொள்கை தொழில் மூலம் வளம் என்பதை ஊக்குவிப்பதாகவும், இதன் காரணமாகவே நாட்டின் ராணுவ பலம் அதிகரித்து வருவதாகவும், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தற்போது திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் எல்லைகளை துணிச்சலுடனும் தைரியத்துடனும் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருவதாக” அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கல்வி, தூய்மை போன்ற விஷயங்களில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்ரீ நாராயணகுரு அறிவுறுத்தியதாகவும் இது அவரது தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுவதாகவும் அமைச்சர் கூறினார். இந்த விஷயங்களில் அரசும் அதிக கவனம் செலுத்தி வருவதாகத்” தெரிவித்தார்.
சமீபத்தில் SU-30MKI விமானத்தில் இருந்து கப்பல் இலக்கை நோக்கி வான்வழி ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் அதிக ரேஞ்ச் சாதனையை இந்திய விமானப்படை (IAF) வெற்றிகரமாக சோதனை செய்தது.
சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் இந்த ஏவுகணை, வங்காள விரிகுடா பகுதியில் சோதனையில் ஈடுபட்டது. பாதுகாப்பு அமைச்சகம் பதிவிட்டுள்ள டிவீட்டில், “இந்திய விமானப்படை பிரம்மோஸ் ஏவுகணையின் extended range, SU-30MKI விமானத்தில் இருந்து கப்பல் இலக்குக்கு எதிராக வெற்றிகரமாக செலுத்தப்பட்டது” என குறிப்பிடப்பட்டிருந்தது. IAF, இந்திய கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), BAPL மற்றும் HAL ஆகியவற்றின் அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் இந்த சாதனையை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க