Rajasthan: சிறுத்தைக்கு ராக்கி கட்டிய ராஜஸ்தான் பெண்: போட்டோ வைரல்!
சிறுத்தைக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராஜஸ்தான் பெண்மணியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரக்ஷா பந்தன், சகோதர பந்தத்தை வெளிப்படுத்தும் ஒரு பண்டிகை பெளர்ணமி நாளில் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிவிடுவர். அவர்கள் நீண்ட ஆயுளுடன், செல்வ வளத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள்.
சகோதரிகள் பூஜை செய்து ராக்கி கயிறு கட்டிவிட்டவுடன் பதிலுக்கு சகோதரர்கள் பரிசுப் பொருட்களைத் தருவார்கள். அன்றைய தினம் சகோதரி கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பவர்களும் உண்டு. அன்றைய தினத்தன்று இணையதளத்தில் சிறுத்தை புலிக்கு பெண் ஒருவர் ராக்கி கட்டிய புகைப்படம் வைரல் ஆனது.
That is how it should be.We need to coexist with forests and wild life.God made all types of life and world is notonly for human beings
— H R Viswanath (@HRViswanath1) August 12, 2022
For ages, man & animal in India have lived in harmony with unconditional love to the wild.
— Susanta Nanda IFS (@susantananda3) August 12, 2022
In Rajasthan, a lady shows this unfettered love to our wild by tying a Rakhi(symbol of love & brotherhood ) to an ailing Leopard before handing over to Forest Department.
(As received) pic.twitter.com/1jk6xi1q10
“இந்தியாவில் மனிதனும் விலங்குகளும் காலங்காலமாக காடுகளின் மீது நிபந்தனையற்ற அன்புடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். ராஜஸ்தானில், ஒரு பெண்மணி, நோய்வாய்ப்பட்ட சிறுத்தைக்கு ராக்கி கட்டி, அன்பு மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த எதிர்பார்ப்பற்ற, எல்லையில்லாத அன்பைக் காட்டும் பெண்ணிடம், அந்த சிறுத்தையும் எதுவும் செய்யாமல் அன்பை முற்றிலுமாக ஏற்று கொண்டது. ” என்று ஒருவர் டிவீட் செய்திருந்தார்.
இந்த சிறுத்தைக்கு வெகு காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தற்போதும் சிறுத்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருகிறது. இதனிடையே சிறுத்தையை வனத்துறையிடம் ஒப்படைக்கும்முன் அதற்கு ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ராக்கி கட்டி வழியனுப்பி உள்ளார். இதன் ஃபோட்டொ சமூக வலைதளத்தில் அனைவராலும் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்