மேலும் அறிய

"பிரதமர் மோடி இருக்க பயமேன்..நிறைய குழந்தைய பெத்துக்கோங்க" ராஜஸ்தான் அமைச்சர் பேசியது என்ன?

நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வீடு கட்டி தருவார் என்றும் ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் காரடி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. மத்திய அமைச்சர்கள் தொடங்கி சாதாரண நிர்வாகிகள் வரை, பலரும் கருத்துகளை தெரிவித்துவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்து கேட்போர் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

"நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்"

மக்கள் அனைவரும் நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வீடு கட்டி தருவார் என்றும் ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் காரடி தெரிவித்துள்ளார். உதய்பூர் நை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "தலைக்கு மேல் கூரை இல்லாமல் யாரும் பசியோடு தூங்க கூடாது என்பது பிரதமரின் கனவு" என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "தலைக்கு மேல் கூரை இல்லாமல் யாரும் பசியோடு தூங்கக்கூடாது என்பது பிரதமரின் கனவு. நீங்கள் நிறைய குழந்தைகளைப் பெற்று கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் வீடுகளை கட்டி தருவார். பிறகு என்ன பிரச்னை. 2024 மக்களவை தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை கேட்டு கொள்கிறேன்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எல்பிஜி சிலிண்டர் விலையை  மத்திய அரசு 200 ரூபாய் குறைத்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் இப்போது உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு 450 ரூபாய்க்கு சிலிண்டர்களை கிடைக்கச் செய்கிறது" என்றார். 

வாய்விட்டு சிரித்த அமைச்சர்கள்:

இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி, வீட்டி கட்டி தருவார் என பாபுலால் காரடி கூறும்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர். அமைச்சர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பழங்குடி நலத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் பாபுலால் காரடி. உதய்பூரில் இருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ள நீச்லியா தலா கிராமத்தில் பெரிய குடும்பமாக வசித்து வருகிறார் பாபுலால் காரடி. இவருக்கு, இரண்டு மனைவிகளும் நான்கு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். 

2023 சட்டமன்றத் தேர்தலில் ஜடோலில் இருந்து நான்காவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2022இல் ராஜஸ்தான் மாநிலத்தின் சிறந்த எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். கடந்தாண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து சமீபத்தில் அமைச்சராக பதவியேற்று கொண்டார். 

இதையும் படிக்க: Ayodhya Ram Mandir: 50 கி.மீட்டருக்கு தெய்வீக மனம்.. அயோத்யா ராமர் கோயிலுக்கு 108 அடி உயர ஊதுவத்தி.. உற்சாக வரவேற்பு

தலைப்பு செய்திகள்

HIV Cases: அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
Longest Serving PM Modi: ‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
‘பண்டிட் நேருவையே மிஞ்சிய நரேந்திர மோடி‘; துள்ளிக் குதிக்கும் பாஜகவினர்; அப்படி என்ன சாதனை.?
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
Embed widget